Breaking

உங்கள் ஸ்மார்ட்போனில் விரைவில் சார்ஜ் குறைகிறதா.. பெரும் கவலை வேண்டாம் இதை செய்யுங்கள்..





ஸ்மார்ட்போனில் விரைவில் சார்ஜ் குறைவது தான் இன்று பலருக்கும் பெரும் கவலையாக உள்ளது. விலை உயர்ந்த ஸ்மார்ட்போனை வாங்கினாலும் அதிலும் எளிதாக சார்ஜ் குறைகிறது என்பதால் அதிக திறன் கொண்ட பேட்டரி உடைய ஸ்மார்ட்போன்களை வாங்க முற்படுகின்றனர். புதிதாக வாங்கிய ஸ்மார்ட்போனைக் குறைந்த நேரம் பயன்படுத்தினாலும் விரைவாக சார்ஜ் குறைந்து விடுகிறது என்றால் அது போனில் உள்ள பிரச்சனை ஆகும். அதனால் அதனை ஒப்படைத்து புதிய மொபைல் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் சில மாதங்கள் கழித்து சார்ஜ் குறையத் தொடங்குகிறது என்றால் ஸ்மார்ட்போனை முறையாக பயன்படுத்தவில்லை என்று அர்த்தம் ஆகும்.

எந்த ஒரு பொருளையும் நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்துதான் நீடித்து உழைக்கும்.
அதுபோலத் தான் ஸ்மார்ட்போனை நாம் பயன்படுத்தும் விதத்தில்தான் அதில் நீண்ட நேரம் சார்ஜ் நிலைத்திருக்கும். அதிக செயலிகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வந்தால் சார்ஜ் குறையும். ஏனென்றால் ஒவ்வொரு செயலியும் சார்ஜை உறிஞ்ச தொடங்குவதால் பேட்டரியின் திறன் குறைந்து விடும். நீண்டகாலம் நீங்கள் பயன்படுத்தாத செயலியையும் தேவையற்ற செயலிகளையும் உங்கள் ஸ்மார்ட் போனில் இருந்து முதலில் நீக்கிவிட்டாலே சார்ஜ் விரைவில் குறையாது.


4ஜி வருகைக்குப் பிறகு தினசரி டேட்டாவின் அளவை மொபைல் நிறுவனங்கள் அதிகப்படுத்தியதால் பலர் மொபைல் டேட்டாவை ஆப் செய்வதே இல்லை. இதனால் மொபைலில் உள்ள அனைத்து செயலிகளும் டேட்டாவை எடுத்துக் கொண்டு இயக்க நிலையிலேயே இருப்பதால் விரைவில் சார்ஜ் குறைந்து விடும். பல செயலிகளையும் தொடர்ச்சியாக பயன்படுத்தி, அதில் இருந்து முழுமையாக வெளியேறாமல் இருந்தால் அந்தச் செயலிகள் டேட்டாவையும் சார்ஜையும் உறிஞ்சு கொண்டே இருக்கும். அதனால் தேவைப்படும் பொழுது மட்டும் மொபைல் டேட்டாவை ஆன் செய்து பயன்படுத்தி வந்தால் பேட்டரியில் சார்ஜ் நீடித்து இருக்கும். பேட்டரியின் திறனைப் பாதிப்பதில் மொபைல் கேம்களுக்கு பெரும் பங்கு உண்டு. நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போனில் அதிகமாக கேம் விளையாடினால் சார்ஜ் குறைவதைப் பற்றி கவலைப்படக் கூடாது. அதிகமாக கேம் விளையாடுவது பேட்டரிக்கு மட்டுமல்லாமல் உங்கள் மொபைலுக்கும் ஆபத்து என்பதை உணர்ந்தால் நல்லது. ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்யும்போது மொபைல் டேட்டாவை ஆப் செய்வது நல்லது. இதனால் விரைவாக பேட்டரி சார்ஜ் ஆவதுடன் எந்தத் தடங்கல் இல்லாமலும் சார்ஜ் ஏறும். மேலும் சார்ஜ் செய்து கொண்டே மொபைலை பயன்படுத்துவதும் பேட்டரியின் திறனைப் பாதிக்கும்.

No comments:

Powered by Blogger.