Breaking

மேல்நிலை மற்றும் பாலிடெக்னிக் வகுப்புகள் எப்போது தொடங்கப்பட உள்ளது





மேல்நிலை மற்றும் பாலிடெக்னிக் வகுப்புகள் எப்போது தொடங்கப்பட உள்ளது ....


உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் திறப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் கணக்கிடப்பட்டு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது.
ஆனால், பள்ளிகளில் படிக்காமல் நேரடியாக எஸ்எஸ்எல்சி தேர்வு எழுத ஹால் டிக்கெட் பெற்றிருந்த தனித்தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், கோவையை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் வழக்கு தாக்கல் செய்தார்.


இந்த மனுவில், தனித்தேர்வர்களுக்கான தேர்வுகள் வருகிற செப்டம்பர் 21ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெற இருப்பதாகவும், பிளஸ் 1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கையையும், பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கையும் வருகிற 24ம் தேதி தொடங்க உள்ளதால், தனித்தேர்வர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க உத்தரவிட வேண்டும்.

மேல்நிலைப்பள்ளி மற்றும் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை தள்ளிவைக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மேல்நிலை மற்றும் பாலிடெக்னிக் வகுப்புகள் எப்போது தொடங்கப்பட உள்ளது என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை விசாரணை வரும் 27ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

No comments:

Powered by Blogger.