Breaking

நாட்டின் சுதந்திரத்திற்காக குழந்தையுடன் போர் புரிந்த ராணி..





நாட்டின் சுதந்திரத்திற்காக குழந்தையுடன் போர் புரிந்த ராணி..

சிறுமியாக இருந்த லட்சுமி
பாய், தந்தையால் குதிரை யேற்றம், துப்பாக்கி சுடுதல், வாள் சண்டை என வீர வித்தைகள் பயின்றாள். ஜான்சி பகுதியை பகுதியை ஆண்ட மன்னர் கங்காதர் ராவுக்கு மணம் முடிக்கப்பட்ட தால் லட்சுமிபாய், ஜான்சி ராணி யானார். கணவர் இறந்துவிட ராணி ஆட்சியேற்று பின் ஒரு வாரிசை தத்தெடுத்தார். ஆனால் அதனை அரச வாரிசாக ஏற்க ஆங்கில அரசாங்கம், ஜான்சியை கைப்பற்றத் துணிந்தது.

இதனால் வெகுண்டெழுந்த ஜான்சிராணி 20 ஆயிரம் பேர் கொண்ட படை திரட்டி, ஆங்கிலேயரை எதிர்க்க போர்க்களம் சென்றார்.. 

அங்கே ஆங்கிலேய படைத்தளபதி டல்ஹவுசி பிரபுவை எதிர்த்து நின்றார் ஆண் உடை தரித்து, தன் குழந்தையை முதுகில் கட்டி
ஜான்சிராணி லட்சுமிபாய் இருகைகளிலும் வாள்கள் ஏந்தி எதிரிகளை துவம்சம் செய்தார். படை வீழ்ச்சி பெற்றாலும் சரணடைய மறுத்த அவர் போர்க்களத்திலேயே மாண்டு வீர சொர்க்கம் அடைந்தார். இன்றளவும் குழந்தைகளுக்கு, இளைய தலைமுறைக்கும் வீர உணர்வு ஊட்ட ஜான்சி ராணி முன்னுதாரணமாக சொல்லப்படுகிறார்

No comments:

Powered by Blogger.