Breaking

வெள்ளையர்களை விரட்டிய வீரவாள்..




வெள்ளையர்களை விரட்டிய வீரவாள்..

சுலேயர்களை தந்திர போரிட்டு வீரமரணம் அடைந்தவர் களில் வீரபாண்டிய கட்டபொம்மன் குறிப்பிடத்தக்கவர். பாஞ்சாலங்கு றிச்சியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்து வந்த அவர், ஆங்கிலேயர்களுக்கு வரி கொடுக்க மறுத்து, எதிர்த்து போரிட்டு வெற்றி கண்டார் பின்னர் நயவஞ்சகர்களின் சூழ்ச் சியால் அவரை ஆங்கிலேயர்கள் கைது செய்து கயத்தாறில் தூக்கிலிட்டனர்

அங்கு அவரது நினைவாக தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப் பட்டு உள்ளது. மேலும் வீரபாண்டிய கட் கட்டபொம்மன் ஆட்சி செய்த பாஞ்சாலங்கு திருச்சியில், அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் கோட்டையும் அமைக்கப்பட்டு உள்ளது. ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உறுதுணையாக அவருடைய தம்பிகள் ஊமைத்துரை, துரைசிங்கம் ஆகியோரும் இருந்தனர். எனவே, வீரபாண்டிய கட்ட பொம்மனை தூக்கிலிட்ட ஆங்கிலேயர்கள், பின்னர் ஊமைத்துரையையும் கைது செய்து பாளையங்கோட்டைக்கு அழைத்து வந்து, அங்குள்ள கோட்டை சிறையில் அடைத்தனர்


சிறையில் இருந்த ஊமைத்துரை எப்ப டியாவது அங்கிருந்து தப்பிச் சென்று மீண்டும் படை திரட்டி போரிட வேண்டும் என்று எண்ணினார். அதன்படி அவர் பாளையங்கோட்டை சிறையில் இருந்து தனது படைவீரர்களுடன் தப்பி, மீண்டும் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந் தார் அங்கு ஊமைத்துரை பழைய கோட்டை புதுப்பித்துக்கட்டி மீண்டும் ஆட்சி புரிந்தார். மேலும் அவர், மருது சகோதரர் களுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடினார். தொடர்ந்து ஊமைத்துரையும் அவருடைய தம்பி துரைசிங்கத்தையும் காளையார் கோவிலில் வைத்து ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். பின்னர் அவர்களை மீண்டும் பாஞ்சாலங்குறிச்சி அழைத்து வந்து, கோட்டை முன்பு தூக்கிலிட்ட னர். அதோடுவிடாமல் மீண்டும் ஆங்கி லேயர்களுக்கு எதிராக யாரும் போராட் டத்தை தொடங்கக்கூடாது என்பதற் காக அந்த கோட்டையையே இடித்து தரைமட்டமாக்கினார்.

ஊமைத்துரையை ஆங்கிலேயர்கள் கைது செய்து, பாளையங்கோட்டையில் அடைத்து வைத்திருந்த தற்போது அரசு கோட்டைச்சிறையானது அருங்காட்சியகமாக உள்ளது. அங்கு ஊமைத்துரை அரங்கமும் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் வெள்ளை யானை விரட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் பயன்படுத்திய வாள் மற்றும் சுருள் வாள் ஆகியவை போற்றி பாதுகாக்கப்பட்டு, பொது மக்களின் பார்வைக்காக வைக்கப் பட்டுள்ளது. அவை வீரத்தின் அடையாள மாக கம்பீரமாக காட்சியளிக்கிறது

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Powered by Blogger.