Breaking

தேசியக் கொடியை பற்றிய சிறப்பு தொகுப்பு..





தேசியக் கொடியை பற்றிய
சிறப்பு தொகுப்பு..

ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட இந்திய மக்களுக்கு தேசியக் கொடி தேவைப்பட்டது. சுவாமி விவேகானந்தர் சீடரான நிவேதிதா 1904-ம் ஆண்டு ஒரு கொடியை உருவாக்கினார் அது சிவப்பு வண்ணத்தில் சதுரமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

உள்ளே மஞ்சள் நிறமாகவும், வஜ்ர மற்றும் வெள்ளை தாமரையை நடுவில் கொண்டும் அமைக்கப்பட்டது. அந்த கொடியில் வங்க மொழியில் 'வந்தே மாதரம்' என்ற வாசகம் இடம் பெற்று இருந்தது சிவப்பு நிறம் சுதந்திரப்போராட்டத்தையும், மஞ்சள் நிறம் வெற்றியை யும், வெள்ளை நிறம் தூய்மையையும் குறிப்பதாக விளக்கப்பட்டது இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், கொல்கத்தாவில் 1906 ஆகஸ்ட் 7-ந் தேதி நடைபெற்ற வங்கப் பிரிவினை எதிர்ப்பு போராட்டத் தின்போது ஆரஞ்சு, மஞ்சள், பச்சை போன்ற 3 வர்ண பாகங்களை கொண்ட மூவர்ணக்கொடி சிந்திரபிரசாத் போஸ் என்பவரால் ஏற்றப் பட்டது. அதிலும் வந்தே மாதரம்' இடம்பெற்றிருந்தது அடுத்து 1907 ஆகஸ்ட் 22-ஆம் தேதி பைக்கஜி காமா அம்மையார் வேறொரு மூவர்ணக் கொடியை ஜெர்மனி, ஸ்டுட்கார்ட் நகரில் ஏற்றி னார். அந்த கொடியினை அவரோடு சேர்ந்து வீரசவர்க்கார், ஷியாம்ஜி கிருஷ்ணவர்மா ஆகியோர் வடிவமைத்து இருந்தனர் 1917-ல் பாலகங்காதர திலகரும், அன்னிபெசன்ட் அம்மை யாரும் தொடங்கிய சுயாட்சி போராட்டத்தில் 5 சிவப்பு நிற நீள் வடிவங்களும், நான்கு பச்சை நிற நேர் கோல் நீள வடிவங்களும் கொண்டு, இந்துக்கள் புனிதமாக கருதும் சப்தரிஷி நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்ட கொடி ஒன்று பயன்படுத்தப்பட்டது பின்பு இந்தியர்கள் எல்லோருக்கும் பொதுவானதொரு கொடியை
வடிவமைக்க ஆந்திராவை சேர்ந்த பிங்கலி வெங்கைய்யா என்பவர் முயற்சி மேற்கொண்டார். சிவப்பு, பச்சை நிற கொடியை உருவாக்கி மகாத்மாவிடம் காண்பித்தார். மகாத்மா அதில் முன்னேற்றத்தினை குறிக்கும் வகையில் சக்கரத்தினையும், வெள்ளை நிறத்தையும் சேர்க்கும்படி வலியுறுத்தினார் அதன்பிறகு வெள்ளை நிறம் இல்லாமல் சக்கரத்துடன் உள்ள சிவப்பு, பச்சை இரண்டு நிறத்தில் கொடி உருவாக்கப்பட்டது. அதனை காந்தி
ஏற்காததினால் வெள்ளை, பச்சை, சிவப்பு என்ற வரிசையில் வர்ணங்கள் வைக்கப்பட்டு ஒவ்வொரு வர்ணத்திலும் சக்கரம் இருப்பதாக
வடிவமைக்கப்பட்டது. இந்த கொடியும் அனைவராலும் ஏற்றுக்கொள்
எப்படவில்லை. அதை தொடர்ந்தும் பல்வேறு கட்டங்களாக பல்வேறு மாற்றங்கள் கொடியில் ஏற்படுத்தப்பட்டுக்கொண்டே இருந்தன.

1947 ஜூன் 23-ந் தேதி ராஜேந்திர பிரசாத் தலைமையில் மவுலானா அபுல் கலாம் ஆசாத், கே.எம்.பணிக்கர், சரோஜினி நாயுடு, சி.ராஜகோபாலச்சாரியார், கே.எம்.முன்ஷி, பி.ஆர். அம்பேத்கர் கோரை கொண்ட குழு தேசியக் கொடியை உருவாக்குவது பற்றி ஆ விவாதித்தது. தேசியக்கொடியில் எந்தவித மத சாயலும் இருக்கக் கூடாது என்ற முடிவு எடுக்கப்பட்டது


இந்திய தேசியக்கொடி 1947 ஜூலை 22-ந் தேதி தற்போதைய வடிவில் ஏற்கப்பட்டது. நீள் சதுர வடிவில் உள்ள இந்த கொடி மேலி ருந்து கீழாக சிவப்பு, வெள்ளை, பச்சை என்று 3 வண்ணங்களுடன் நடுவில் நீல நிறத்தில் 24 ஆரங்களை கொண்ட அசோகச்சக்கரத்துடன் உள்ளது.

1951-ல் இந்திய தரக்கட்டுப்பாட்டுத் துறையால் தேசியக்கொடி டிக்கு அளவு முறை நிர்ணயிக்கப்பட்டது. கொடியின் நீளம், அகலம் நிறங்களின் அளவு, அடர்த்தி, பரப்பளவு, துணியின் தரம், கொடி கயிற்றின் தரம் ஆகியவற்றை அது விவரிக்கின்றது கொடி தயாரிப்பதில் விதிகளை மீறுவது மிகப்பெரிய குற்றமா கும். தேசியக்கொடியை பயன்படுத்துவதற்கு கும் சட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன நமது தேசத்தின் அடையாளம், தேசியக்கொடி!
CLICK HERE TO DOWNLOAD

No comments:

Powered by Blogger.