Breaking

அரசு பணியில் சேர மாற்றம் கொண்டு வந்த மத்திய அரசு...






அரசு பணியில் சேர மாற்றம் கொண்டு வந்த மத்திய அரசு...

மத்திய அரசின் வங்கி பணி, ரயில்வே பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அவற்றுக்கென உள்ள தேர்வு அமைப்புகள் தனித்தனியாக தேர்வு நடத்துகிறது. மேலும், வேலை தேடுபவர்களும் ஒவ்வொரு தேர்வுக்கும் தனித்தனியாக விண்ணப்பித்து வருகிறார்கள். தேர்வு கட்டணத்தை தனித்தனியாக செலுத்த வேண்டியுள்ளதால், செலவு அதிகரிக்கிறது.

இந்நிலையில், இதை கருத்தில் கொண்டு பல்வேறு மத்திய அரசு பணிகளுக்கு பொதுவான ஒரே தகுதி தேர்வு மூலம் ஆள் எடுக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த மதிப்பெண் அடிப்படையில், மத்திய அரசு துறைகள் தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்வார்கள்.

இந்த தகுதி தேர்வு நடத்துவதற்காக, தேர்வு பணியாளர் தேர்வு முகமை அமைக்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், தேசிய பணியாளர் தேர்வு முகாமையை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கூட்டம் முடிந்த பிறகு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க முடிவு. வேலை தேடுபவர்கள் பொதுவான ஒரு தகுதி தேர்வு எழுதினால் போதும். இதனால், எண்ணற்ற தேர்வுகள் எழுதுவதால் ஏற்படும் பண செலவு, நேரம் வீணாவதையும் மிச்சப்படுத்தலாம். பல ஆண்டுகளாக இளைஞர்கள் இந்த கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது என கூறினார்.

இந்தநிலையில், தேர்வு பணியாளர் தேர்வு முகமை இளைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது, தேர்வு பணியாளர் தேர்வு முகமை என்பது கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். பொது தகுதி தேர்வு மூலம் பணிகளுக்கான தேர்வு நடைபெறும் என்றும், அரசு வேலையே தேடுவோருக்கு இருக்கும் சிரமங்கள் குறைவதுடன், விலைமதிப்பற்ற நேரத்தையும் வளங்களையும் மிச்சப்படுத்தும். இது வெளிப்படைத்தன்மைக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்..

No comments:

Powered by Blogger.