Breaking

பொதுத் துறை - தலைமைச் செயலக பொது (நூலகம்) துறை - காலியாக உள்ள நூலக உதவியாளர் பணியிடம் - மாற்று பணி நியமனம் மூலம் நிரப்புவது - தொடர்பாக.2019-2020.






அனுப்புநர்

திருமதி. மைதிலி K. ராஜேந்திரன், இ.ஆ ப அரசு சிறப்பு செயலாளர்

பெறுநர்

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்!

அரசு முதன்மைச் செயலாளர் / அரசு செயலாளர் தலைமைச் செயலகத்தின் அனைத்து துறைகள்

தலைமைச் செயலகம் சென்னை 600 009.

ஐயா

பொருள் பொதுத் துறை - தலைமைச் செயலக பொது (நூலகம்) துறை - காலியாக உள்ள நூலக உதவியாளர் பணியிடம் - மாற்று பணி நியமனம் மூலம் நிரப்புவது - தொடர்பாக

பார்வை

அரசாணை (2டி) எண், 106, பொது (நிர்வாகம் 1 (ம) சட்டமன்றம்)த் துறை , நாள்.05.02.2020.

2. அரசு கடித எண். 39775/ பொது (நிர்வாகம் 1 (ம) சட்டமன்றம்) த் துறை நாள். 07.02.2020.



| பார்வை ஒன்றில் காணும் அரசாணையின் மீது தங்களது கவனம் ஈர்க்கப்படுகின்றது அதில், 2019-2020 ஆம் ஆண்டிற்கான தலைமைச் செயலக நூலக உதவியாளர் பணியிடம் நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக 2 (இரண்டு) என நிர்ணயம் செய்யப்பட்டு, பார்வை இரண்டில் காணும் அரசு கடிதத்தின் வாயிலாக உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சென்னை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் எதிர்நோக்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தற்பொழுது உள்ள சூழ்நிலையில் மேற்குறிப்பிட்ட பணியிடத்தை நேரடி நியமனம் மூலம் நிரப்ப காலதாமதம் ஆகும் எனக் கருதப்படுகிறது

தலைமைச் செயலக நூலக உதவியாளர் பணியிடத்திற்கான பொருண்மையை பராமரிக்க கீழ்க்கண்டவாறு வரையறுக்கப்பட்டுள்ளது..
CLICK HERE TO DOWNLOAD

No comments:

Powered by Blogger.