Breaking

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு செப்டம்பர் 2020 - தனித்தேர்வர்களின் விண்ணப்பங்களை ஆய்வு செய்வது தொடர்பான அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் கடிதம்!!





பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு செப்டம்பர் 2020 - தனித்தேர்வர்களின் விண்ணப்பங்களை ஆய்வு செய்வது தொடர்பான அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் கடிதம்!!


பொருள் : பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு செப்டம்பர் 2020 தனித்தேர்வர்களின் விண்ணப்பங்களை ஆய்வு செய்தல் தொடர்பான அறிவுரைகள் - சார்பு

நடைபெறவுள்ள செப்டம்பர் 2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் தங்களது மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களில் (Service Centres) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை 24.08.2020 முதல் 27.08.2020 வரையிலான நாட்களிலும், சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் (தக்கல்) 28.08.2020 மற்றும் 29.08.2020 ஆகிய இருநாட்களிலும் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

தனித்தேர்வர்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டிய நாட்கள்

24.08.2020 முதல் 27.08.2020 வரை

சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் (தக்கல்) | 28.08.2020 மற்றும் 29.08.2020

விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் நாட்கள் விண்ணப்பங்கள் மற்றும் விண்ணப்பக் கட்டணத் தொகையை (தட்கல் உட்பட) சேவை மையத்தினர் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டிய நாள்

மேற்குறிப்பிட்டுள்ள தேதிகளில் சேவை மையங்களிலிருந்து விண்ணப்பங்கள் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க பட்டவுடன் மேற்படி விண்ணப்பங்களை முழுமையாக ஆய்வு செய்து விண்ணப்பதாரர்கள் இடைநிலைப் துணைத்தேர்வினை எழுதுவதற்குரிய அனுமதிக்கப்பட முழுத்தகுதியினைப் பெற்றுள்ளனரா என்பதை உறுதி செய்யும், விண்ணப்ப இணைப்புகள் முழுமையாக உள்ளனவா என்பதை சரிபார்க்குமாறும், தகுதியில்லாத தேர்வர்கள் பதிவு செய்திருப்பின், அத்தகைய விண்ணப்பங்களின் விவரத்தினைக் கீழ்க்காணும் படிவத்தின்படி தயாரித்து 04.09.2020 அன்று அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் (பணியாளர்) அவர்கள் பெயரிட்ட முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
CLICK HERE TO DOWNLOAD

No comments:

Powered by Blogger.