Breaking

வரும் 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை தமிழகத்தில் பள்ளிகளில் இணையவழிக் கல்வி நடைபெறாது என்றும் அந்நாட்களில் விடுமுறை விடுக்கப்படும் என்றும் மாநில பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5 நாட்களும் காலாண்டு விடுமுறை நாட்களாக கருதப்படும் என்று அறிவிப்பு. PDF..





வரும் 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை தமிழகத்தில் பள்ளிகளில் இணையவழிக் கல்வி நடைபெறாது என்றும் அந்நாட்களில் விடுமுறை விடுக்கப்படும் என்றும் மாநில பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 5 நாட்களும் காலாண்டு விடுமுறை நாட்களாக கருதப்படும் என்று அறிவிப்பு.

கோவிட்-19 பெருநோய்த் தொற்று காரணமாக எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையில், தமிழ்நாட்டில்
உள்ள சில பள்ளிகளில் ஜூன் 2020 முதல் இணையவழி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன அரசாணை (நிலை) எண். 65 பள்ளிக்கல்வித்துறை நாள் 29.07.2020 ல் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் இணையவழி கல்விக்கான வழிக்காட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப்பள்ளிகளும் அவ்வழிகாட்டுதல்களை பின்பற்றி இணையவழி வகுப்புகளை நடத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.மேலும் அரசாணையில் பள்ளிகளில் நடத்தப்பெறும் இணையவழி வகுப்புகள் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் பத்தி 5.5-ல் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை அனைத்துப்பள்ளிகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் பின்பற்றுமாறும் இணையவழி வகுப்புகள் வருகை, மாணவர்களின் செயல்திறன் மதிப்பீடு நோக்கங்களுக்காக கட்டாயமாக கணக்கிட போடக்கூடாது


2] மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் போது இணையவழி வகுப்புகளுக்கு வருகை புரியாத மாணவர்களும், இணைய வழி வகுப்புகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு இணையாக பாடங்களில்

பயிற்சி பெறுவதற்காக ஆசிரியர்கள் பொறுப்பேற்று தேவைக்கேற்ப கூடுதல் பயிற்சி வகுப்புகள் நடத்தி
உறுதிப்படுத்த வேண்டும்

3. மிண்ணனு முறைகள் மற்றும் மிண்ணனு சாதனங்கள் மூலம் குழந்தைகளுக்கு தொலைவிலிருந்து அனுப்பப்படும் பாடம் சார்ந்த பணிகள் (Assignments) மற்றும் மதிப்பீடுகள் (Assessments) ஏதும் மாணவர்களின் இறுதித்தரம்/மதிப்பெண்கள்/செயல்திறன் மதிப்பீடு போன்றவற்றை நிர்ணயிக்க கட்டாயாமாகக் கணக்கிடப்பட கூடாது.ஆண்டுதோறும், செப்டம்பர் மாதத்தில் பள்ளிகளில் காலாண்டுத் தேர்வுகள் முடிந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுப்பு அறிவிப்பது நடைமுறையாகும். இணையவழி வகுப்புகள் நடைபெறும் தற்போதைய சூழ்நிலையில், 21.09.2020 முதல் 25.09.2020 வரை ஐந்து நாட்களுக்கு மட்டும் காலாண்டு விடுமுறையினை
அறிவிக்க அரசு உத்தேசித்துள்ளது
எனவே, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஒப்புதலுடன் 21.09.2020 முதல் 25.09.2020 வரையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் இணையவழி வகுப்புகள் நடைபெறாது என
அறிவிக்கப்படுகிறது
CLICK HERE TO DOWNLOAD



No comments:

Powered by Blogger.