Breaking

ஸ்டேட் பேங்கில் வெறும் 59 நிமிடங்களில் வீட்டிலிருந்தபடியே கடனை பெற முடியும்.





ஸ்டேட் பேங்கில் வெறும் 59 நிமிடங்களில் வீட்டிலிருந்தபடியே கடனை பெற முடியும். 

தொழில் துவங்க நினைப்பவர்கள் வங்கியில் கடன் பெற பெரிய முயற்சிகள் செய்ய தேவை இல்லை. ஸ்டேட் பேங்கில் வெறும் 59 நிமிடங்களில் வீட்டிலிருந்தபடியே கடனை பெற முடியும். ஆன்லைன் மூலமாக 10 ஆயிரம் முதல் 10 லட்சம் வரை கடன்களை மிக எளிதாக பெறலாம்.

பிரதம மந்திரியின் முத்ரா திட்டத்தின் கீழ் ஸ்டேட் பாங்க் இந்த கடனை வழங்குகிறது. கார்ப்பரேட் அல்லாத சிறு குறு நிறுவனங்களுக்கு 10 லட்சம் வரை கடன் வழங்க 2015 ஏப்ரல் 8 இல் பிரதமர் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

தேவையான தகவல்களை https://www.sbiloansin59minutes.com இந்த பக்கத்திற்கு சென்று உள்ளீடு செய்தால் 59 நிமிடங்களில் கடன் பெறலாம். வங்கியில் கடனை பெற ஒருவர் வங்கி கணக்கில் ஸ்டேட்மெண்ட், அடையாள அட்டை, புகைப்படம், வசிப்பிடம் தொடர்பான ஆதாரம், சேல்ஸ் கொடேஷன்கள், வணிக ஐடி (business ID), விற்பனை ஆவணங்கள், ஜிஎஸ்டி (GST) அடையாள எண், வருமான வரி தாக்கல் செய்த விபரம் விவரங்களை அளிக்க வேண்டும்.
இதில் கடன் பெறுவதில் ஏதாவது பிரச்சனைகளை வாடிக்கையாளர் எதிர்கொண்டால்,022-22740510 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். அல்லது என்ற gm.micofinance@sbi.co.in மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

No comments:

Powered by Blogger.