Breaking

ஆத்ம_நிர்பார்_நிதி_திட்டம் சாலையோர வியாபாரிகளுக்கான சிறுகடன்_உதவி_திட்டம்.




ஆத்ம_நிர்பார்_நிதி_திட்டம்
சாலையோர வியாபாரிகளுக்கான 
சிறுகடன்_உதவி_திட்டம்.

பாரதப்பிரதமர்
மாண்புமிகு  #மோடி_ஜி அவர்கள் 
அறிவித்த இந்தத் திட்டத்தின்படி 
சாலையோர வியாபாரிகளுக்கு 
#ரூ10000 கடனுதவி வழங்கப்படும்.

இந்த
கடனை பெறுவதற்கான 
வழிமுறைகள் மிகவும் எளிதானது.

அவர்கள் 
வசிக்கும் பகுதியில் 
உள்ள பஞ்சாயத்து அல்லது மாநகராட்சிக்கு சென்று, 
தனது 
#ஆதார்_அட்டை, 
#குடும்ப_அட்டை ஆகியவற்றின் 
நகல்களை சமர்ப்பித்து, 
*'தான்'* -அந்தப் பகுதியில்
வியாபாரம் செய்வதற்கான 
சான்றிதழைப் பெறவேண்டும்.

இந்த மூன்றையும் இணைத்து 
இணையத்தில் இதற்கான 
சிறு வியாபாரிகள் கடன்திட்டத் தளத்தில் (Portal) இதை பதிவேற்றம் செய்யவேண்டும்.

அவ்வாறு 
பதிவேற்றம் செய்யும்போது,
 'தான்' எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறோமோ  -அந்த வங்கியை விரும்பும் வங்கி (Preferred Bank) என்ற இடத்தில் பூர்த்திசெய்ய வேண்டும். 

அவ்வாறு 
பூர்த்தி செய்துவிட்டால் 
ஒரு வாரத்திற்குள் அந்த வங்கியின் 
மூலமாக ரூபாய் 10,000/- 
தங்களது  கணக்கில் வரவு வைக்கப்படும். 

அதை 
சிறிது சிறிதாகவோ, 
அல்லது முழுவதுமாகவோ 
எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்தக் கடனுக்கு 
எட்டு சதவிகித வட்டி. எனினும்
 7 சதவீதவட்டியை அரசாங்கம் 
*மானியமாக* கொடுத்து விடுகிறது.  

எனவே
#வெறும்_ஒரு_சதவீத_வட்டிக்கு 
இந்த கடன் கிடைக்கும்.

இதை 
மாதம் 1000 வீதம் 
10 மாதத்திற்குள் சரியாக 
திருப்பிச் செலுத்திவிட்டால் அடுத்து, 
#ரூ20ஆயிரம் கடன் வழங்கப்படும். 

சாதாரணமாக அன்றாடம்,  
தலையில் சுமந்து வியாபாரம் செய்பவர்கள், காய்கறி விற்பவர்கள், 
தெரு வியாபாரிகள், 
சிறு உணவகங்கள் நடத்துபவர்களுக்கு *கந்துவட்டி தொல்லையிலிருந்து விடுபடுவதற்கு* 
இது ஒரு வரப்பிரசாதமாக அமையும். 

இதைப்படிக்கும் அன்பர்கள்  
தங்களுக்குத் தெரிந்த, 
தங்களது வீடுகளுக்கு காய்கனி வழங்குபவர்களுக்கு  எடுத்துச் சொல்லி, அவர்கள் பயன்பெறுவதற்கு உதவிடுமாறு அன்போடு வேண்டுகின்றேன்🙏

தகவல் செந்தில் அவர்கள்

No comments:

Powered by Blogger.