Breaking

முதன்மைக்கல்வி அலுவலர் கூட்ட அறிவுரைகள்.




 முதன்மைக்கல்வி அலுவலர் கூட்ட அறிவுரைகள்.

1. மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு விளம்பர பேனர்கள் அனைத்துப் பள்ளிகளிலும் வைக்கவேண்டும்.

2. தலைமையாசிரியர் கட்டாயம் அனைத்து வேலை நாட்களிலும் பள்ளியில் இருக்கவேண்டும்..

3. மற்ற ஆசிரியர்களை குழுக்களாக பிரித்து மாணவர் சேர்க்கை, மாணவர்களுக்கு கற்பித்தல் சார்ந்த செய்முறைகள் தயார் செய்தல் ,  பள்ளி பதிவேடுகள், EMIS பணிகள், அரசு நலத்திட்டங்கள் சார்ந்த பணிகள் போன்ற பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

4. கடந்த ஆண்டைவிட குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகள் மாணவர் எண்ணிக்கை உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

5. மாணவர் எண்ணிக்கை 10 க்கும் குறைவாக உள்ள பள்ளிகள் மீது சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

6.  EMIS  ல் Student promotion 100% முடிக்கவேண்டும்.


7. மாணவர் சேர்க்கைக்காக எந்த சான்றையும் கட்டாயப்படுத்தக்கூடாது.
8. விலையில்லா பொருட்கள் ஏதும் பள்ளியில் கூடுதலாக இருக்கக்கூடாது.

8. தற்போது பருவ மழை தொடங்க உள்ளதால் பள்ளி கட்டடங்கள் மற்றும் வளாகங்கள் பாதுகாப்பாக உள்ளதை உறுதிப்படுத்தவேண்டும். 
இதில் முழு கவனம் செலுத்தி அனைவரும் செயல்படவேண்டும் . என அறிவுறுத்தப்பட்டது.
எனவே அனைத்து தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றி எந்த புகாருக்கும் இடமளிக்காமல்  சிறப்பாக செயல்பட அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

*மாவட்டக் கல்வி அலுவலர்,*
*இராணிப்பேட்டை.*

No comments:

Powered by Blogger.