Breaking

தாட்கோ மூலம் ஆதி திராவிடர்களுக்காக செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு... மாவட்ட ஆட்சியர்




தாட்கோ மூலம் ஆதி திராவிடர்களுக்காக செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,

தாட்கோ மூலம் ஆதி திராவிடர்களுக்காக செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது வரம்பு 18 முதல் 65 வரை. குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.1 இலட்சம் ஆகும்.

1. அ) நிலம் வாங்கும் திட்டம்
ஆ) நிலம் மேம்பாடு திட்டம்
இ) துரித மின் இணைப்பு திட்டம்
2.தொழில் முனைவோர் திட்டம்
அ) பெட்ரோல், டீசல், எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைத்தல்.
ஆ) தொழில் முனைவோர் திட்டம்
3. அ) இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம்
ஆ) மருத்துவ மையம், மருயதியல், கண் கண்ணாடியகம்,
முட நீக்கு மையம், இரத்த பரிசோதனை நிலையம் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல்.
4. அ) சுய உதவிக் குழுக்களுக்கான சுழல் நிதி.
ஆ) சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி மானியம் திட்ட தொகையில் 50ரூ.
5. மாவட்ட ஆட்சியர் விருப்புரிமை நிதி.
6. மேலாண்மை இயக்குநர் விருப்புரிமை நிதி.
7. தாட்கோ தலைவர் விருப்புரிமை நிதி.
8. இந்திய குடிமைப்பணி முதன்மைத் தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி.
9. சட்டப்பட்டதாரிகளுக்கு நிதியுதவி
10. தமிழ்நாடு தேர்வாணையத்தொகுதி-1 முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதியுதவி.
11. பட்டயக் கணக்கர் / செலவு கணக்கர்/ நிறுவன செயலர்களுக்கு நிதியுதவி.


தாட்கோ இணையதள முகவரி 

http://application.tahdco.com/ 

மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தினை படியிறக்கம் செய்தோ / நகலினையோ, கைப்பிரதி விண்ணப்பங்களையோ சமர்ப்பிக்க வேண்டியதில்லை.
விண்ணப்பிக்கும் போது
1. விண்ணப்பதாரர் பற்றிய முழு விவரங்கள்.
2. புகைப்படம்.
3. இருப்பிடச் சான்றிதழ் எண்.
4. சாதி சான்றிதழ் எண். (எண், வழங்கப்பட்ட நாள், வழங்கியவர் மற்றும் வழங்கப்பட்ட அலுவலகம்).
5. குடும்ப வருமான சான்றிதழ் எண். (எண், வழங்கப்பட்ட நாள், வழங்கப்படுவதற்கான காரணம் - நேர்காணல் நடத்தப்படும் தேதிக்கு 1 1/2 ஆண்டுகள் முன்புவரை வருமானச்சான்று பெற்றிருக்கலாம். அதாவது வருமானச் சான்றின் வயது 1 1/2 ஆண்டு வரை இருக்கலாம்.
6. பட்டா / சிட்டா-(நிலம் வாங்குதல் மற்றும் நிலம் மேம்பாடு திட்டம்)
7. குடும்பஅட்டை எண்.
8. ஆதார் எண்.
9. விண்ணப்பதாரரின் தொலைபேசி/கைபேசி எண்.
10. விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரி
11. திட்டங்களின் விவரங்கள் முதலியவற்றை இணையதளத்தில் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். ஒன்று முதல் பத்து வரை உள்ள விவரங்கள் இன்றியமையாதவை.


தொலைபேசி / கைபேசி எண். மற்றும் மின்னஞ்சல் முகவரி இல்லாதவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் தவிர, திட்டங்களுக்கு ஏற்றாற்போல் தேவைப்படும் ஆவணங்களையும் சமர்ப்பிக்கவேண்டும்.

விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறுவதற்கு அறிவிக்கப்பட்ட நாள்களில் 24 மணி நேரமும் பதிவு செய்யலாம். மேலும், விண்ணப்பங்களை அந்தத மாவட்டமேலாளர் அலுவலகத்தில் மாவட்டமேலாளர் அலுவலகத்தில் மாவட்டமேலாளர் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் மட்டும் பதிவு செய்யலாம்.

இதற்கான விண்ணப்பம் ஒன்றிற்கு பயனாளியிடமிருந்து ரூ.60/- வசூல் செய்யப்படும். விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் ஒப்புகை ரசீது விண்ணப்பதாரருக்கு வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகத்தை அணுகவும்.



No comments:

Powered by Blogger.