Breaking

அரசு ஊழியர்கள், அதிகாரிகள் முழுமையாக பணிக்கு வர உத்தரவு- புதுச்சேரி





அரசு ஊழியர்கள், அதிகாரிகள் முழுமையாக பணிக்கு வர உத்தரவு- புதுச்சேரி
புதுச்சேரியில் கொரோனா தொற்று தொடங்கியவுடன் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை கடந்த மே 5 தொடங்கி பல்வேறு உத்தரகளை பிறப்பித்திருந்தனர்.
அதன்படி அனைத்து அரசு செயலர்கள், துணை செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் நூறு சதவீதம் பணிக்கு வர வேண்டும். அதே நேரத்தில் குரூப் பி அதிகாரிகள் 50 சதவீதத்தினரும், குரூப் சி ஊழியர்கள் 33 சதவிதத்தினர் தேவைக்கேற்ப அலுவலகத்துக்கு வர வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
தற்போது அனைவருக்கும் பணிக்கு வர அரசு சார்பு செயலர் ஜெய்சங்கர் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, அனைத்து அரசு அலுவலகங்களில் குருப் பி, குருப் சி ஊழியர்கள் முழுமையாக பணிக்கு வரவேண்டும்.
அனைத்து அலுவலகங்களும் இனிமேல் முழு வருகையுடன் செயல்படும், கொரோனாவை தடுப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அலுவலகங்களில் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.