Breaking

பாம்புகள் ஏன் தோலை உரித்துக் கொள்கின்றன






பாம்புகள் ஏன் தோலை உரித்துக் கொள்கின்றன

உயிரினங்கள் அனைத்தும் தோலால் போர்த்தப்பட்டு தங்கள் உடல் உறுப்புகளை வெளிப்புற தொற்றுகளின்தாக்கங்களில் இருந்து பாதுகாக்கின்றன. அதேபோல உடலின் உட்புறம் இருக்கும் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்கள் வெளியேராமல் பாதுகாக்கின்றன. இதனால் ஒவ்வொரு உயிரிணமும் தங்கள் தங்கள் உயிர்ச்சூழலுக்கு ஏற்ப தங்கள் தோலை திறனுள்ளதாக புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றன.


நிலத்தில் ஊர்ந்து வாழும் உயிரினங்களின் தோல் புதுப்பித்தல் நடவடிக்கைகளுக்கும் ஏனைய உயிரினங்களின் தோல் புதுப்பித்தல் முறைக்கும் அடிப்படை வேறுபாடு உள்ளது. மனித தோலின் வெளி அடுக்கு தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும். நமது உடலில் ஒவ்வொரு மணி நேரமும் 2 கோடி 'தோல் வெளி அடுக்கு' உயிரணுக்கள் முதிர்ச்சியடைந்து நம் கண்களுக்கு புலப்படாமல் உதிர்ந்துவிடுகின்றன.நமது தோலின் 'தோல் வெளி அடுக்கு' உயிரணுக்கள் அனைத்தும் ஒரு மாத காலத்தில் முழுமையாக மாற்றியமைக்கப் பட்டிருக்கும்.



இப்படி புதுப்பிக்கும் நடவடிக்கைகள் காரணமாகத்தான் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப தோலின் பரப்பும் அதிகரிக்க இயலும். அதாவது நம் உடலின் வளர்ச்சியோடு இசைந்து 'உடன் வளர்ச்சி' அடைகிறது. ஆனால் இந்த 'உடன் வளர்ச்சி' எல்லா உயிரினங்களிலும் குறிப்பாக ஊர்வன வகை விலங்குகளுக்கு நிகழ்வதில்லை. அதனால் தங்களது 'சட்டையை' அதாவது தங்களது உடல் இரசாயன இயக்கியலோடு தொடர்ப்பு இழந்து 'சருகு' ஆகா மாறிப்போன 'சட்டையை' தாங்களாக முயற்சித்துத்தான் உதிர வைத்து புதிய தோலோடு வாழ ஆரம்பிக்க வேண்டும்.

கால்கள் போன்று உடலில் இருந்து சிக்கலான உறுப்பு நீட்சிகள் கொண்ட சில பல்லி வகை ஊர்வன தங்கள் வாயையும் பற்களையும் கொண்டு தங்கள் மீதான சட்டையை உரிக்க வேண்டும். பாம்புகளுக்கு சட்டை உரித்தல் மிகவும் சுலபமானது. அவற்றின் உடல்வாகு மிகவும் எளிய வடிவில் இருப்பதால் ஒரு இடுக்கின் வழியாக தனது உடலை செலுத்தி சட்டையை இலகுவாக அகற்றிக் கொள்கிறது.
பெரிய பாம்புகள் வருடத்திற்கு நான்கு முறையும் வளரும் பருவத்தில் உள்ளவை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை சட்டையை உரிக்கின்றன. நிலத்தில் ஊர்வன வகை விலங்குகளின் 'தோல் வெளி அடுக்கு' உயிரணுக்கள் பகுதியில் நார்ச்சத்து அதிகம். அவை கரடுமுரடான பகுதிகளில் தங்களை சிராய்த்துக்கொண்டு நகர்கின்றன. இதனால் அவற்றின் தோல் நார்ச்சத்தைக் கொண்டு உறுதியாக அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை இந்த விலங்குகள் புதிய தோலை வளர்த்துக்கொண்டு காலாவதியான தோலை அதாவது சட்டையை உதிர்த்துக் கொள்கின்றன. இவற்றின் தோலில் உள்ள நார்த் தன்மை காரணமாக காலாவதியாகிப்போன தோல் வெளி அடுக்கு' உயிரணுக்கள்' தனித்தனியாக உதிராமல் ஒரு தொடராக உரிக்கப்படுகிறது.

கம்பளிப் பூச்சிகள் கூடு அமைத்துக் கொண்டு அதனுள்ளே இருக்கும்போது பாம்புகளைப் போல தோலை உரித்துக் கொள்கின்றன. அது குறித்து பின்னர் சற்றே மாறுபட்ட கோணத்தில் பார்ப்போம்.

No comments:

Powered by Blogger.