Breaking

முடக்கத்தான் கீரையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம். அதன் பயன்கள் என்ன என்பதை முழுமையாகப் பார்க்கலாம்.





முடக்கத்தான் கீரை
Cardiospermum Halicacabum என்ற அறிவியல் பெயர் கொண்ட முடக்கத்தான் கீரை, முடக்கு+அறுத்தான் = முடக்கறுத்தான் என்பதிலிருந்து உருவானது. சில நாட்களுக்கு முன்பு கழுத்துவலிக்கு முடக்கத்தான் கீரையைப் பயன்படுத்த சொன்னோம். முடக்கத்தான் கீரையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம். அதன் பயன்கள் என்ன என்பதை முழுமையாகப் பார்க்கலாம்.
இதை, குறைந்தது மாதம் இரு முறையாவது உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.
முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும்.
மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், ஏறத்தாழ எல்லோர் வீட்டுக் கொல்லைப் புறத்திலும் இது படர்ந்து கிடக்கும். முடக்கத்தான் கீரை வேலிகளில் செடியாக வளர்ந்து கிடக்கும், துவர்ப்புச் சுவையுடைய வகைக் கீரை. இந்த கீரை பல மருத்துவகுணங்கள் அடங்கியே ஒரு அற்புதமான கீரை. முடக்கத்தான் கீரையின் தண்டு, இலை எல்லாவற்றையுமே பயன்படுத்தலாம். இந்த கீரையை எப்படி சமைத்து உண்ணலாம் மற்றும் அதனின் மருத்துவ குணாதிசயங்களையும் கிழே பார்க்கலாம்.
ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் யுனிவர்சிட்டி முடக்கத்தான் கீரையிலுள்ள "தாலைட்ஸ்" ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை அறிந்து, மேலும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டுள்ளார்கள்.
இதன் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறு நீரகத்திற்கு எடுத்துச்சென்று விடும். இதுபோல் எடுத்துச்சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நம் உடலிலே விட்டு விடுகிறது. இது ஒரு மிக முக்கியமான இணையான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறது.

முடக்கத்தான் கீரை சூப்:
முடக்கத்தான் கீரையை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் அலசி ஒரு தடவை அரிந்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து முக்கால் டம்ளர் நீராகி இறக்கி, அதில் சிறிது உப்பு, மிளகு போடி போட்டால் சூப் ரெடி. கசப்பாக இருக்காது. சூப் சுவையாய் இருக்கும். தினமும் காலையில் காபி டீக்கு பதிலாக இந்த 
சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை நெருங்காது.
துவையல்
முடக்கத்தான் கீரை கொண்டு துவையல் செய்யல்லாம். கீரை இலைகளை ஆய்ந்து, எண்ணெயில் வதக்கி உப்பும்,காய்ந்த மிளகாயும் சேர்த்துத் அரைத்துத் தொடு கூட்டாக துவையல் செய்து சாப்பிட சுவையாக இருக்கும்.
பொரியல்
கீரையை பொடியாக நறுக்கி, வேகவைத்து அதில் தோலுரித்த சிறிய வெங்காயம் பாதியாக வெட்டி கொஞ்சம் எண்ணையில் வதக்கி பொரியல் செய்தும் சாப்பிடலாம்.
ரசம்
முடக்கத்தான் கீரை பொடியாக நறுக்கி, கொடியை மிளகு, சீரகத்துடன் சேர்த்து சுவையான ரசம் வைக்கலாம். இது உடலுக்கு மிகவும் நல்லது.
கூட்டு
கீரையை பொடியாக நறுக்கி, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் மற்ற பருப்புகளுடன் சேர்த்து இந்தக் கீரையில் கூட்டும் செய்யலாம்.
மாவை புளிக்க வைக்க
அடை செய்வதற்கும், தோசை மாவை புளிக்க வைப்பதற்கும் இந்தக் முடக்கத்தான் கீரை அரைத்துச் சேர்த்தால். மாவு சீக்கிரம் புளித்து விடும். இந்த கீரையை அடையில் அதிகமா சேர்த்தால், அடை இன்னும் சுவையாக இருக்கும்.
மருத்துவ குணங்கள்
இந்த கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முடக்கத்தான் கீரை உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொள்வதன் மூலம் மூல நோய், மலச்சிக்கல், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற பல நோய்கள் குணமடையும்.
இந்தக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் கைகால் வலி, மூட்டுவலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் பறந்து போகும். மூட்டுகளில் தங்கி இருக்கும் புரதம்,யூரிக் அமிலம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், மற்றும் கொழுப்புத் திரட்சி படிவங்களை கரைத்து, வலிகளை போக்க வகை செய்யும்.

சாறு எடுக்கும் முறை : 
இஞ்சி சிறய துண்டு, பூண்டு நான்கு பல், சின்ன வெங்காயம் ஒன்று, சீரகம் அரை தேக்கரண்டி, மிளகு அரைத்தேக்கரண்டி இவைகளை கொஞ்சம் எண்ணெய் விட்டு நன்கு வதக்கி எடுக்கவேண்டும்.பிறகு அதில் இரண்டு குவளை நீர் ஊற்றி முடக்கத்தான் கீரை நன்றாக வேக வைக்கவேண்டும். கீரை நல்லா வெந்து அதன் சாரம் இறங்கிய பிறகு வடிகட்டி எடுத்தால் முடக்கத்தான் கீரையின் சாறு தயார். மூட்டுகளில் தங்கிய எல்லா வலிகளும் கரைந்து வலி இருந்த சுவடே இல்லாமல் மறைந்து விடும். நாற்பது வயது தொடங்கியவர்கள் இந்த முடக்கத்தான் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்லது. முதுகு தண்டுவடம் தேய்மானம் இருப்பவர்கள், மாதவிலக்கு நின்ற பிறகு பெண்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானம் மற்றும் எல்லாவிதமான மூட்டுவாதம், மூட்டுவலிகளைக் இந்த கீரை குணப்படுத்தும்.
முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து கொஞ்சம் நெய்யில் வதக்கி உட்கொண்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
இந்தக் கீரையை அரைத்து அதன் சாற்றைக் காதில் விட்டால் காது வலி நிற்கும்.
கட்டிகளில் மேல் இந்த கீரையை வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.
வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் வாய்வுத் தொல்லை நீங்கும்.
மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை மிக்க நல்லது. இந்தக் கீரையின் சாறு ஒரு மேஜைக்கரண்டி போதும் பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளுக்கு போக்கும்.
இந்தக் கீரையை அரைத்து அடிவயிற்றில் கட்டினால் கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவமாகும்.

No comments:

Powered by Blogger.