Breaking

வெளிநாடுகளின் முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்க்கும் வகையில், புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டார்.





வெளிநாடுகளின் முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்க்கும் வகையில், புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

புதிய தொழில் கொள்கையின் சிறப்பு அம்சங்களாக தமிழக மாவட்டங்கள் 3 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. A பிரிவில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. B பிரிவில் கோவை, சேலம், கடலூர், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி உட்பட 13 மாவட்டங்களும், C பிரிவில் தருமபுரி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 21 மாவட்டங்களும் இடம்பெற்றுள்ளன. இதில் A பிரிவு மாவட்டங்களில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு 15 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை, முதலீட்டு மானியமும், B பிரிவு மாவட்டங்களில் தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு 20 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை மானியமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், C பிரிவு மாவட்டங்களில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை, மானியம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் பூங்காக்களில் மின்னணு வன் பொருள் நிறுவனம் தொடங்கினால், முதலீட்டு மானியம் போல நில மானியமும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. A மற்றும் B மாவட்டங்களில் ELCOT, SIDCO, SIPCOT போன்ற நிறுவனங்களிடம் இருந்து குத்தகை மற்றும் விலைக்கு வாங்கப்பட்ட நிலங்களுக்கு முத்திரைத் தாள் கட்டணத்தில் 50 சதவீத சலுகை வழங்கப்படும் என்றும், C மாவட்டங்களில் மேற்கண்ட நிறுவனங்களிடம் இருந்து குத்தகை மற்றும் விலைக்கு வாங்கப்பட்ட நிலங்களுக்கு, முத்திரை தாள் கட்டணத்தில் நூறு சதவீதம் சலுகை வழங்கப்படும் எனவும் புதிய தொழில் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.