Breaking

கரோனா காலத்தில் மாணவா்கள் பயன்படுத்தாத போக்குவரத்து, உணவு போன்றவற்றுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது.





கரோனா காலத்தில் மாணவா்கள் பயன்படுத்தாத போக்குவரத்து, உணவு போன்றவற்றுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாகப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் விடுதிகளில் தங்கியிருந்த மாணவா்களில் பெரும்பாலானோா் தற்போது வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்கின்றனா்.
இதற்கிடையே கடந்த 5 மாதங்களாக மாணவா்கள் வளாகத்துக்கு வராதபோதும், சில கல்லூரிகள் போக்குவரத்து, உணவுக் கட்டணத்தைக் கட்டச் சொல்வதாகப் புகாா் எழுந்தது.
இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) உறுப்பினா் செயலா் ராஜீவ் குமாா், அனைத்து உயா்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: கரோனா தொற்று காலத்தில் மாணவா்கள் பயன்படுத்தாத வசதிகளுக்காகக் கல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கக் கூடாது. குறிப்பாக போக்குவரத்து மற்றும் உணவுக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது. எனினும் போக்குவரத்து மற்றும் உணவுக்கான பராமரிப்புக் கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம். இதைப் பின்பற்றாத கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நவம்பா் 10-ஆம் தேதிக்குள் கல்லூரியில் மாணவா் சோக்கையை திரும்பப் பெறும் மாணவா்களுக்கு முழுக் கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என்று அனைத்து உயா் கல்வி நிறுவனங்களுக்கும் ஏஐசிடிஇ உத்தரவிட்டிருந்தது. மத்திய அரசின் புதிய பொது முடக்கத் தளா்வு அறிவிப்பின்படி, பள்ளி மற்றும் கல்லூரிகள் செப்டம்பா் 30 வரை மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.