Breaking

கலைத்துறைக்கான வௌிவாரி பட்டப்படிப்பிற்கான புதிய பதிவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.





கலைத்துறைக்கான வௌிவாரி பட்டப்படிப்பிற்கான புதிய பதிவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கலைத்துறைக்கான பாடநெறிகளை மீளாய்விற்கு உட்படுத்தவும் புதிய பாடநெறிகளை சேர்ப்பதற்காக புதிய நிபுணர் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
எதிர்கால தொழில்வாய்ப்புகளை இலக்காகக் கொண்டு நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கமைய புதிய பாடத்திட்டங்களைக் கலைத்துறைக்கு அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தற்போது கலைத்துறையில் காணப்படும் பாடத்திட்டங்கள் மிக நீண்டகாலமாக மறுசீரமைக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ள அவர் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் கலைத்துறை வௌிவாரிப் பட்டப்படிப்பிற்குப் புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர் எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

No comments:

Powered by Blogger.