Breaking

தனியார் பள்ளிகள் முழு கல்வி கட்டணம் கேட்கிறதா.. பெற்றோர்கள் புகார் தெரிவிக்க E.mail முகவரி.. சென்னை ஆட்சியர்..






தனியார் பள்ளிகள் முழு கல்வி கட்டணம் கேட்கிறதா.. பெற்றோர்கள் புகார் தெரிவிக்க E.mail  முகவரி.. சென்னை ஆட்சியர்..

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதத்தின் இறுதியில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார தேக்க நிலை காரணமாக தனியார் பள்ளிகள் முழு கல்வி கட்டணத்தையும் பெற்றோர்களிடமிருந்து கேட்கக்கூடாது என்றும் அதிகபட்சமாக 40 சதவீதம் கட்டணங்களை மட்டுமே தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
மேலும் பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கையும் மீறி தனியார் பள்ளிகள் 100 சதவீதம் கட்டணம் வசூல் செய்தால் புகார் அளிக்கலாம் என மாவட்ட கல்வி அலுவலர்கள் இந்த புகார்களை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.


இந்த நிலையில் தற்போது சென்னை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி சென்னை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் முழு கட்டணங்களை கேட்டால் உடனடியாக 

feescomplaintcell@gmail.com 

என்ற இ-மெயில் மூலமாக புகார் அளிக்கலாம். புகார் பெறப்பட்டதை தொடர்ந்து அந்த பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

No comments:

Powered by Blogger.