Breaking

வடநாட்டு பெரியார் நரேந்திர தபோல்கர் பிறந்த தினம் - நவம்பர் 01..

வடநாட்டு பெரியார் நரேந்திர தபோல்கர் பிறந்த தினம் - நவம்பர் 01:

நரேந்திர தபோல்கர் இந்திய பகுத்தறிவாளர், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர், மருத்துவர் ஆவார். இவர் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான செயற்பாடுகளுக்கான பெரிதும் அறியப்படுகின்றார். இவர் 20 ஆகத்து 2013 அன்று சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

கல்வியாளர், காந்தியவாதி, சமவுடமைவாதி தேவடாரா தபோல்கர் ஆவார். இவர் மருத்துவக் கல்வியை மிராசு மருத்துவக் கல்லூரியில் பெற்று மருத்துவரானார்.

இவர் மருத்துவராக பத்தாண்டுகள் பணி செய்ந்தார். அதன் பின் 1980 களில் இவர் சமூக நீதி தொடர்பாக இயக்கங்களில் பங்கெடுத்தார். காலப் போக்கில், இவர் மூட நம்பிக்கைகள் எதிர்க்கும் பணிகளில் செயற்படத் தொடங்கினார். 1989 இல் இவர் மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்கான மகாராட்டிர செயற்குழு என்ற அமைப்பை நிறுவி, மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டார். பல சாமிமார்களையும் தந்திரக் காரர்களை இவர் எதிர்த்தார். இவர் புனர்வாழ்வு அமைப்பான Parivartan அமைப்பு உறுப்பினர்களில் ஒருவரும் ஆவார். இவர் மாராத்தி இதழான Sadhana வின் ஆசிரியரும் ஆவார்.
20 ஆகத்து 2013 அன்று, தபோல்கர் தனது காலை நடைக்கா வெளியே சென்று இருந்தார். அப்பொழுது ஒரு அடையாளப்படுத்தப்படாத ஒருவரால் Omkareshwar கோயில் அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். இவரை நான்கு தடவைகள் சுட்டுள்ளார்கள். இரண்டு தோட்டாக்கள் தலையிலும், இரண்டு மார்பிலும் தாக்கி உள்ளன.
மூடநம்பிக்கைக்கெதிராக போராடியதால் படுகொலை செய்யப்பட்ட நரேந்திர தபோல்கரின் மகளும் தன் தந்தையின் மரணத்திற்குப் பின் பல மடங்கு வீரியத்துடன் மூடநம்பிக்கைகு எதிராய் மும்பையில் போராடி வரும் முக்தா தபோல்கர்மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றுகிறார்.

எந்த மூடநம்பிக்கைக்கெதிராய் 25 ஆண்டு காலம் போராடி என் தந்தை உயிரிழந்தாரோ அந்த மூடநம்பிக்கைக் கெதிரான சட்டம் அவரது படுகொலைக்குப் பின்தான் கொண்டு வரப்பட்டுள்ளது.
இச்சட்டம் வந்த பின் சாதி மதம் சார்ந்த 300 வகையான குற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இக்குற்றங்களுக்கெதிரான போராட்டங்களை அனைவரும் முன்னெடுப்போம் என்றார்.
மகாராஷ்டிர மாநிலத்தில், பெற்ற சிசுவையே பலி கொடுக்குமளவுக்கு மூடநம்பிக்கை பழக்கங்கள் இன்னமும்கூட நீடிக்கின்றன. ஏவல் , பில்லி, சூனியம் உள்ளிட்ட பகுத்தறிவுக்கு சவால்விடும் சமாச்சாரங்களை எதிர்த்து அங்கேயும் ஒரு பெரியார் குரல் கொடுத்தார். அவர்தான் நரேந்திர தபோல்கர்.

பாவிகள், அவரையும் கடந்த மாதம் படுகொலை செய்துவிட்டனர். மூடநம்பிக்கைகளை வேரறுக்க கடுமையான சட்டம் தேவை என தபோல்கர் 15 ஆண்டுகளாக போராடினார். அவர் காலத்தில் அது நடக்கவில்லை. அவரது படுகொலைக்குப் பிறகு அத்தகையச் சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த அவசரச் சட்டம், பில்லி சூனியம், நரபலி மற்றும் பிற மனிதநேயமற்ற பழக்கங்களைக் கட்டுப்படுத்தும் சட்டமாகும்.
இந்தியாவில் கடந்த ஐந்து வருடங்களில் 768 பேர் மூடநம்பிக்கைகளுக்கு தங்களின் இன்னுயிரை இழந்திருப்பதாகச் சொல்கிறது ஒரு கள ஆய்வு! 

“பொதுவாக, ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்தவர்களை சீர்திருத்தம் பேசுபவர்களை எதிர் கொண்டு வெற்றி பெறுவது வைதீகர்களுக்கு எளிது. ஆனால், பெரியார் மூட நம்பிக்கை எதிர்ப்பாளர் மட்டுமல்ல. அவர் கடவுள், ஆன்மா, மறுபிறப்பு, சொர்க்கம், நரகம் என்ற அனைத்தையும் ஒரே வீச்சில் புறக்கணித்தார். அவருடைய வாழ்க்கையில் அவர் கொண்ட கொள்கைகளுக்கு மாறாக நடந்து கொண்டதில்லை. ஒருவரை வாழ்த்துவதால் அவர் வாழ்வார் என்றோ, சாபம் விடுவதால் அழிந்து விடுவார் என்றோ நம்பவில்லை. வாழும் போதே பெரியாருக்கு சிலை வைக்கப்பட்டது. சிலை வைத்தால் பிற்காலத்தில் வருபவர்கள் தன்னையும் கடவுளாக்கி விடுவார்களோ என்ற எண்ணத்தில் ’கடவுள் இல்லை’ என்று சிலைக்கு கிழே எழுதப்பட வேண்டுமென விரும்பினார்.

அவருடைய நுட்பமான அறிவையும் ஆய்வும் மிக ஆழமானதென்பது அவருடைய ’தத்துவ விளக்கம்’ நூலை படித்தால் தெரியும். நாளை நடப்பதை அறிவதற்கு ஜோசியம் தேவை யில்லை. மனித வாழ்க்கை வளர்ச்சியின் வேகத்தை பார்த்தாலே ’இனி வரும் உலகம்’ எப்படி இருக்கும் என்ற கூற முடியும் ” என்கிறார் வழக்கறிஞர் அருள்மொழி,
வடநாட்டு பெரியார் நரேந்திர தபோல்கரின் மரணம் மிகப் பெரிய அவமானம். மதவாத, சாதிய சக்திகள் வளர்ந்து வரும் நிலையில், பெரியார் கருத்துகளின் தாக்கம் வலிமையாக்கப்பட வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டை மூடப்பழக்கங்களிலிருந்து மீட்க முடியும்.


No comments:

Powered by Blogger.