Breaking

செப்டம்பர் - 09 இலங்கைத் தமிழ் இயற்பியலாளரும், கல்வியாளரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும்-கந்தையா குணரத்தினம் மறைந்த தினம்.

இன்று நினைவு நாள் :- செப்டம்பர் - 09 


இலங்கைத் தமிழ் இயற்பியலாளரும், கல்வியாளரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும்-கந்தையா குணரத்தினம் மறைந்த தினம்.

ஆரம்ப வாழ்க்கை:-

இலங்கையில் உள்ள ஏலாலையில் ஏப்ரல்-30, 1934 இல் பிறந்தார்.

தெல்லிப்பழை, 
யூனியன் கல்லூரியில் கல்வி பயின்றார். 

 1954 - இலங்கைப் பல்கலைக்கழகம்சென்று 1958 இல் இயற்பியலில்சிறப்புப் பிரிவில் இளமாணிப் பட்டம் பெற்றார்.

பணிகள்:-

பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற பின்னர் குணரத்தினம் கொழும்புப் பல்கலைக்கழகத்திலும், இலங்கைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார்.

1960 முதல் 1963 வரை லண்டன் இம்பீரியல் கல்லூரியில்
பயின்று டிப்புளோமா பட்டத்தையும், கலாநிதிப்பட்டத்தையும் பெற்றார்.

1971 சனவரி முதல் செப்டம்பர் வரை டர்காம் பல்கலைக்கழகத்தின் முதல் நிலவியல் பிரிவில் வருகைதரு விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

1971 அக்டோபர் முதல் டிசம்பர் வரை குயீன் எலிசபெத் கல்லூரியின் இயற்பியல் துறையில் வருகைதரு ஆய்வாளராகப் பணியாற்றினார்.

இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் ஆரம்பிக்கப்பட்ட போது யாழ்ப்பாண வளாகத்தின் இயற்பியல் பீடத்தின் நிறுவனத் தலைவராக ஏப்ரல் 1975 இல்  நியமிக்கப்பட்டார்.

1980 அக்டோபர் வரை அவர் அதன் தலைவராகப் பணியாற்றினார்.

1981 சனவரி முதல் அக்டோபர் வரை மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பீடத்தின் வருகைதரு விரிவுரையாளராகப் பணியாற்றினார்.


1994 ஏப்ரல் முதல் 1997 பெப்ரவரி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் பணியாற்றினார்.

இறக்கும் வரை அவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் "ஓய்வுபெற்ற" பேராசிரியராகப் பணியாற்றினார்.

பேராசிரியர் குணரத்தினம் 1998 ஆம் ஆண்டில் அரச வானியல் கழகத்தின் ஆய்வாளராகவும், 1999 இல் இயற்பியல் கழகத்தின் உறுப்பினராகவும் இணைந்தார்.

2001 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம்வழங்கிக் கௌரவித்தது.

மறைவு:-

பேராசிரியர் குணரத்தினம் 2015, செப்டம்பர் - 09 இல் கொழும்பில்காலமானார்.

No comments:

Powered by Blogger.