Breaking

அக்டோபர் -10. தாவர வகைப்பாட்டியல், தாவர புவியியல் ஆய்வுகள் மேற்கொண்ட ஜெர்மனியை சேர்ந்த தாவரவியலாளர்- ஹென்ரிச் கஸ்டவ் அடால்ஃப் எங்லர் பிறந்த தினம்.

தாவர வகைப்பாட்டியல், தாவர புவியியல் ஆய்வுகள் மேற்கொண்ட
ஜெர்மனியை சேர்ந்த தாவரவியலாளர்- ஹென்ரிச் கஸ்டவ் அடால்ஃப் எங்லர் பிறந்த தினம்.

பிறப்பு:-

மார்ச்-25, 1844 ஆம் ஆண்டு,
போலந்தில் பிறந்தார். 
இவரது தந்தை ஒரு வர்த்தகர். தொழில் பிரச்சினைகள் காரணமாகக் குடும்பத்தைப் பிரிந்தார். தாய், 4 வயது குழந்தை எங்லருடன் பிரெசலூயா என்ற இடத்துக்கு குடிபெயர்ந்தார்.
அரசுப் பள்ளியில் சில காலம் படித்தார். மாக்டேலம் ஜிம்னாசியம் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது, இயற்கை அறிவியலில் ஆர்வம் பிறந்தது. தாவரங்கள், தனிமங்கள் ஆகியவற்றை சேகரிக்கத் தொடங்கினார். 
பிரெஸ்லாவ் பல்கலைக்கழகத்தில் 19-வயதில் சேர்ந்தார். அப்போது பல தாவரவியல் வல்லுநர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. இந்த காலக்கட்டத்தில் தன் ஊரில் உள்ள அனைத்து வகையான தாவரங்களைப் பற்றியும் ஆராய்ந்து அறிந்தார்.பிரெஸ்லாவ் பல்கலைக்கழகத்தில்
1866 ஆம் ஆண்டு
 முனைவர் பட்டம் பெற்றார்.

பணிகள்:-

தாவரவியல் பாட ஆசிரியராக பணிபுரிந்தார்.
 1889-1921 வரை பெர்லின்-தாலம் தாவரவியல் பூங்கா இயக்குநராகவும் பணியாற்றினார். இதை உலகின் மிகச் சிறந்த தாவரவியல் பூங்காவாக மாற்றினார்.


ஆராய்ச்சிகள்:-

தாவரங்கள் வளரும் சூழல், அவை செழித்து வளர்வதற்கு ஏற்ற இடங்கள் ஆகியவை பற்றி அறிய பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டதால் உயிருள்ள தாவரங்களையும்,,தொல்லுயிர்ப் படிவத் தாவர வகைப்படுத்துதலில் (Plant Taxonomy) முக்கியப் பங்காற்றியதோடு இத்துறையில் மிகச் சிறந்த வல்லுநராகத் திகழ்ந்தார்.
உறவுமுறைகளை அடிப்படையாகக் கொண்ட பயன்பாடு, செயல்திறம் ஆகிய இணைந்த ஒர் இயற்கை வகைப்பாட்டுத் தொகுப்பை உருவாக்கி, தாவரங்கள் அனைத்தையும் குடும்பங்கள், துறைகள் என வகைப்படுத்தினார். 
இவரின் வகைப்பாட்டியல் தொகுப்பை முதன் முதலில் உண்டான மரபுவழி வகைப்பாடு எனக்கூறலாம்.
பாசிகள் தொடங்கி பூக்கும் தாவரங்கள் வரை விரிவான முறையில் வகைப்படுத்த வகை செய்யும் ஒரே வகைப்பாட்டு முறையாக எங்ளர் வகைப்பாட்டு முறை கருதப்படுகிறது.
மேலும் தாவர வகைப்படுத்துதலில் இவரது வழிமுறைதான் இன்றும் பரவலாகப் பின்பற்றப்படுகிறது. இது ‘எங்லர் சிஸ்டம்’ எனப்படுகிறது. தாவரவியலாளர்கள், தாவரங்கள் குறித்த கையேடுகளை எழுதுபவர்களும் இந்த முறையையே பின்பற்றுகின்றனர்.
பல்லுயிர் நில அமைப்பியல் (Geology on Biodiversity) காரணிகளின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறியதோடு உயிர் புவியியல் பகுதிகளையும் (Biogeographical Regions) 1879 ஆம் ஆண்டு வரையறுத்தார்.


நூல்கள்:-


2010, இல் Plant Diversity and Evolution: Phylogeny, Biogeography, Structure and Function, 
தி நேச்சுரல் பிளான்ட் ஃபேமிலீஸ், தி பிளான்ட் கிங்டம், சிலபஸ் ஆஃப் பிளான்ட் நேம்ஸ் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 1880 முதல் தன் வாழ்நாள் இறுதி வரை ‘பொட்டானிக்கல் இயர் புக்ஸ்’ என்ற இதழை வெளியிட்டு வந்தார்.
தனது புத்தகங்களில் தாவரங்களின் படங்களை வரைய திறமையான கலைஞர்களைப் பயன்படுத்தினார். 
தி நேசரலிசென் பிளான்சென் வகைப்பாடு தொகுப்புக்கு 33000 வரைபடம் வரைந்து கொடுத்தார்.

 பரிசுகள்:-


1913 ஆம் ஆண்டில் இவருக்கு லின்னேயன் பதக்கம் வழங்கப்பட்டது.


  இறப்பு:-

தாவரவியல் உலகின் முன்னோடியாகக் கருதப்படும் இவர், அக்டோபர்-10, 1930 ஆம் ஆண்டு,ஜெர்மனியில் மரணமடைந்தார்.

சிறப்புகள்:-

அனைத்துலக தாவர வகைப்பாட்டியல் குழுமம் 1986 ஆம் ஆண்டு தாவர வகைபாட்டியலில் சிறந்தவர்களுக்கு  எங்களர் பதக்கம் என்ற பரிசை உருவாக்கியும், வழங்கி பெருமைப்படுத்துகிறது.

No comments:

Powered by Blogger.