Breaking

அக்டோபர்-12. உலக ஆர்த்ரைடிஸ் தினம். (World Arthritis Day)


இன்று:- அக்டோபர்-12.

உலக ஆர்த்ரைடிஸ் தினம்.  
(World Arthritis Day)

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-12 ஆம் தேதி உலக முடக்குவாத தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த நோயானது ஆர்த்ரைடிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. ஆர்த்ரைடிஸ் மற்றும் ரூமாட்டிக் வியாதிகளுக்கு எதிரான சர்வதேச அமைப்பு, 1996-ஆம் ஆண்டிலிருந்து இந்த தினத்தை அனுசரித்து வருகிறது. 
இந்த தினமானது ஆர்த்ரைடிஸ் எனப்படும் முடக்குவாக்கு நோய்க்கு எதிரான விழிப்புணர்வை உண்டாக்கவும், அதுகுறித்து நடவடிக்கைகள் எடுக்கவும் உதவுகிறது.

ரூமாட்டிசத்திற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றிணைப்பு என்னும் அமைப்பானது, முன்னர் குறிப்பிட்ட  ஆர்த்ரைடிஸ் மற்றும் ரூமாட்டிக் வியாதிகளுக்கு எதிரான சர்வதேச அமைப்புடன் இணைந்து இது தொடர்பான அனைத்து முயற்சிகளை, ஒரு தனி இணையத்தளம் அமைத்து முன்னெடுத்துவருகிறது.

ஆர்த்ரைடிஸ்:

முடக்குவாதம் என்பது உடலின் தாங்குதிறன் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி குறைப்பாட்டால் உடலின் உறுப்புகளை பாதிக்கும் நோயாகும். குறிப்பாக மூட்டுத்திசுக்கள் பாதிப்படைந்து பின் எலும்புகளின் வடிவமைப்பையே மாற்றி விடும்.

ஆர்த்ரடைடிஸ் என்பது மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம் ஆகும். ஆர்த்ரடைடிஸ் உடலில் உள்ள 170 க்கும் மேற்பட்ட எலும்பு இணைப்புகளில் ஏற்படக்கூடிய நோய்களை குறிக்கும். இதனால் வலி, மூட்டுகளின் வளையும் தன்மை இழந்து விரைப்பான நிலை மற்றும் வீக்கம் (வீக்கம் இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம்) போன்றவை மூட்டு இணைப்புகளில் ஏற்படும்.

அங்கங்களை முடக்கிவிடுவதால் இந்த நோயை முடக்குவாதம் என்று சொல்வார்கள். இதைப் பற்றி 3000 ஆண்டுகளுக்கு முன்பே சரகர், சுஸ்ருதர், வாக்படர் ஆகியோர் எழுதியுள்ளனர். இதை மகாவாத வியாதி என்றும், குடம் என்றும், வாத பலாசம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். நவீன மருத்துவத்தில் இது ருமடாயிடு ஆர்த்ரைடிஸ் என அழைக்கப்படுகிறது.

ஆர்த்ரைடிஸின் அறிகுறிகள்:

மூட்டுகளில் வலி ஏற்படும், மூட்டுகளை நீட்ட, மடக்க இயலாத தன்மை காணப்படும். காலையில் எழுந்தவுடன் இரண்டு மணி நேரத்துக்கு எந்த வேலையும் செய்ய முடியாது. 

மூட்டுகள் சூடாக இருக்கும், தொட்டால் வலிக்கும். உள்ளேயும் வலி காணப்படும். இதனால் மூட்டை அசைக்கவோ, நீட்டவோ இயலாது. மூட்டுகள் வளைந்து காணப்படும்.
காய்கறிகள் வெட்டுதல், சில பொருட்களை தூக்குதல், எழுதுவது, நாற்காலியிலிருந்து எழுந்திருப்பது,நடப்பது போன்ற செயல்களை செய்யும் போது ஏற்படும் அசைவுகளினால் மூட்டு இணைப்பு/எலும்பு இணைப்புகளில் ஏற்பட்டுகின்ற வலி அல்லது அழுத்தம் அதிகரித்தல் இணைப்புகளில் வீக்கம், இணைப்புகள் வளையும் தன்மையை இழந்து விரைப்பாக காணப்படும். வீக்கம் கண்ட பகுதி சிவந்தும் வெப்பமாகவும் இருக்கும்.

ஆர்த்ரைடிஸின் அறிகுறிகள்:

மூட்டுகளில் வலி ஏற்படும், மூட்டுகளை நீட்ட, மடக்க இயலாத தன்மை காணப்படும். 
காலையில் எழுந்தவுடன் இரண்டு மணி நேரத்துக்கு எந்த வேலையும் செய்ய முடியாது. 

மூட்டுகள் சூடாக இருக்கும், தொட்டால் வலிக்கும். உள்ளேயும் வலி காணப்படும். இதனால் மூட்டை அசைக்கவோ, நீட்டவோ இயலாது. மூட்டுகள் வளைந்து காணப்படும்.
காய்கறிகள் வெட்டுதல், சில பொருட்களை தூக்குதல், எழுதுவது, நாற்காலியிலிருந்து எழுந்திருப்பது,நடப்பது போன்ற செயல்களை செய்யும் போது ஏற்படும் அசைவுகளினால் மூட்டு இணைப்பு/எலும்பு இணைப்புகளில் ஏற்பட்டுகின்ற வலி அல்லது அழுத்தம் அதிகரித்தல் இணைப்புகளில் வீக்கம், இணைப்புகள் வளையும் தன்மையை இழந்து விரைப்பாக காணப்படும். 
வீக்கம் கண்ட பகுதி சிவந்தும் வெப்பமாகவும் இருக்கும்.

கால்சியம் அவசியம்:

எலும்புகள் சீராக வளர கால்சியம் சத்து அவசியம். கால்சியம் குறைபாடு ஏற்பட்டால், எலும்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். மேலும் வைட்டமின் டி சத்து கிடைக்கப்பெறாதவர்களுக்கு வெறும் கால்சியம் மட்டும் உடலில் கிடைத்தால், கால்சியம் எலும்பில் சேராமல் கழிவு வழியாக வெளியே வந்துவிடும். எனவே கால்சியம் குறைபாடு நீங்க பால், பன்னீர், கேழ்வரகு மற்றும் எள் ஆகியவைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

No comments:

Powered by Blogger.