Breaking

அக்டோபர் - 24.. கேப்டன் லட்சுமி - இலட்சுமி சேகல் பிறந்த தினம்.


அக்டோபர் - 24..
கேப்டன் லட்சுமி - இலட்சுமி  சேகல் பிறந்த தினம்.

பாலக்காட்டில் பிறந்தவரான  இலட்சுமி சேகல்  லேடி லிவிங்ஸ்டன் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியின் பள்ளியில் தம் பள்ளிக் கல்வியைப் பயின்றார். 1930ல் இராணிமேரிக் கல்லூரியில் பட்டப்படிப்பை தொடர்ந்தார். 1938ல் சென்னை மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் முடித்து, பின்பு பெண்ணியல் மற்றும் மகப்பேறு மருத்துவ பட்டச்சான்றிதழ் (diploma) பயின்றார். மருத்துவக் கல்வியுடன், அரசியல் செயல்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தார். அந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியிலும், அகில இந்திய பெண்கள் மகாநாட்டிலும் பங்கு கொண்டிருந்தார். ஆனால் லஷ்மியோ, சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் அதிரடி அரசியலில் ஈர்க்கப்பட்டார்.
1943ல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் பிரிவான “ஜான்சி இராணி” படையைத் துவங்கினார். ஆசியாவிலேயே முதன்முதலில் துவங்கப்பட்ட பெண்கள் படையாக இது கருதப்படுகிறது. இவருடைய மொத்த வாழ்க்கையும் பல்வேறு சாதனைகளையும், மனிதநேய சேவைகளையும் தன்னகத்தேக் கொண்டது. தம் இறுதிக்காலம் வரை ஓயாத உழைப்பை அயராது வழங்கியவர். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, மார்க்சிஸ்ட் கம்யூனிசக் கட்சியில் வாழ்நாள் உறுப்பினராகவும், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் உறுப்பினராகவும் வாழ்நாள் முழுவதும் சமுதாய நியாய தர்மங்கள் குறித்த கவனமும் கொண்டிருந்தார்.
1971ம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியில் சேர்ந்து, இராஜ்ய சபை உறுப்பினராக செயல்பட்டார். 1998ல் பதம விபூஷண் விருதும் வழங்கப் பெற்றார். 2002ம் ஆண்டில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில், இடதுசாரி கட்சிகளின்  வேட்பாளராக பா.ஜ.க வேட்பாளரான   ஏ.பி,ஜெ. அப்துல்கலாம் அவர்களை எதிர்த்து நின்று வெற்றி வாய்ப்பை இழந்தார். இவருடைய மகள் சுபாஷிணி அலி என்பவரும் கம்யூனிஸ்ட் தலைவராக இருப்பவர். கண்முன் நடக்கக்கூடிய அக்கிரமங்கள் எதுவாயினும் தயங்காமல் தட்டிக்கேட்கக் கூடிய வல்லமை நிறைந்தவர் இவர். தம்முடைய 92வது வயதிலும், சோர்ந்து உட்காராமல், கூட்டம் நிறைந்த தன்னுடைய மருத்துவமனைக்கு தினமும் காலையில் சென்று ஆலோசனை வழங்குவதை வழக்கமாக  கொண்டிருந்தார்.

No comments:

Powered by Blogger.