மயில் ஆடினால் மழை வருமா... அறிவியல் காரணங்கள் பற்றி அறிவோம்..
மயில் ஆடினால் மழை வருமா...
அறிவியல் காரணங்கள் பற்றி அறிவோம்..
பல நூற்றாண்டுகளாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மயில் ஆடினால் மழை வரப்போகிறது என்று நம்பிக்கொண்டு இருந்தார்கள் மேலும் பருவ மழை வருவதை ஒரு சக்தியால் அறிந்து கொண்டுதான் மயில் ஆடுகிறது என்ற எண்ண ஓட்டத்தில் நம்பி வருகின்றனர்.
மயில் ஆடினால் மழை வரலாம், வராமலும் இருக்கலாம் மயில் ஆடினால் மழை வருவதை உணர்த்துகிறது என்பதற்கு எந்த அறிவியல் காரணமும் இல்லை. இயற்கையில் விலங்குகள் ஒவ்வொரு விதத்தில் தன்னுடைய துணையை கவருகின்றன அதுபோல மயில் அதனுடைய தோகை விசிறி போல் விரித்து ஒரு வித சிலிர்ப்பு உடன் நடனம் ஆடுகின்றன அப்போது தன்னுடைய துணையை கவருவதற்காக செய்கிறது.
மயில்கள் இந்தியா, இலங்கை, மியான்மர், ஜாவா, காங்கோ போன்ற பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றன. பெரும்பாலும் ஆசிய பகுதிகளில் மழை காலம் மே மாதத்திற்கு பிறகு துவங்கும் அதாவது வசந்த காலத்தில் உலகம் முழுவதிலும் உள்ள பறவைகள் இனப்பெருக்கம் செய்ய ஆரம்பிக்கும் இது மயிலுக்கு பொருந்தும். இந்தியா, இந்தோனேசியா பகுதிகளில் உள்ள மயில்கள் வசந்தகலத்தில் ஆடுவதைக் காணலாம் இதிலிருந்து நாம் மழைக்காலம் ஆரம்பமாகப் போகிறது என்பதை உணரலாம்
No comments: