Breaking

வாழ்வில் சாதிப்பதற்கான தன்னம்பிக்கை வரிகள்..

வாழ்வில் சாதிப்பதற்கான தன்னம்பிக்கை வரிகள்..


எத்தனை சிறப்பாக குதிரை வண்டியை இழுத்தாலும். அதற்கு சாட்டையடி உண்டு.


🌼அதேபோல் எத்தனை சிறந்த மனிதனாக நீ இருந்தாலும் நமக்கும் விமர்சனம் உண்டு.
.
🌼பெண்ணின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத எந்த ஆணும் உலகில் எதையும் சாதிப்பதில்லை.

🌼அளவில்லா அன்பையும். அளவில்லா அக்கறையும். வைத்து நாம் நேசித்தவர்கள் நமக்கு வைக்கும் பெயர் - தொல்லை.

🌼நேரத்திற்கு தகுந்தாற்போல் மாறும் பச்சோந்தி மனிதர்களுடன் ஒட்டி உறவடுவதை விட, தன்னம்பிக்கையோடு தனியாக வாழ்ந்து விடலாம்.

🌼முட்டாள் பழிவாங்க துடிப்பான்.
புத்திசாலி மன்னித்து விடுவான்.
அதிபுத்திசாலி அந்த இடத்தில் இருந்து விலகி விடுவான்.

 🌼வலியில் பெரிய வலி எது தெரியுமா ?
நம் கூடவே இருந்து சிரித்து பேசி, பின் முதுகில் குத்தியது மட்டும் அல்லாமல்,
ஒன்றும் செய்யாததை போல் நடித்து கொண்டு இருக்கும் போலி உறவின் நெருக்கமே.

🌼உனக்குள் எவ்வளவு வலிமை இருந்தாலும், வைராக்கியம் இல்லை என்றால், உன்னால் எதையுமே சாதிக்க முடியாது.

🌼எந்த நிலையிலும் உங்களை விட்டுக் கொடுக்காத ஒருவரை சம்பாதியுங்கள். வாழ்க்கை அழகாக மாறிவிடும்.

🌼தன்னுடைய செயலும் தன்னுடைய வார்த்தைகளும் மட்டும் தான் சரி என்று வாதாடுபவர்கள் மத்தியில், அமைதியை மட்டும் ஆயுதமாக வைத்துக்கொள். அவர்களுக்கு புரியவைக்க வரும் காலம் ஒன்று உள்ளது.
சிந்தித்து செயல்படு இதுவும் கடந்து போகும்.

🌼சில தவறுகள் நாம் யார் என்பதை சொல்லி விடும்.
சில தவறுகள் நாம் யாராக இருக்க வேண்டும் என்பதை சொல்லிவிடும்.

🌼தன் தவறை உணராதவர்களை திருத்தி விடலாம்.
அதை நியாயப்படுத்தும் நபர்களை ஒருபோதும் திருத்த முடியாது.

🌼இன்று பழகுபவர்கள் நாளை வேறு ஒருவர் வந்தவுடன், அர்த்தமற்ற ஆயிரம் காரணங்கள் சொல்லி நம்மிடம் இருந்து விலகுவார்கள், அல்லது நம்மை விலக்கி விடுவார்கள். இது தான் இந்த காலத்து உறவுகள்.

🌼ஒருவரை குறை கூறும் முன், ஒருமுறை அவர்கள் சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் என்று யோசித்துப் பாருங்கள்.
யாரையும் குறை சொல்ல தோன்றாது.

🌼ஒருவர் உன்னை பிடிக்கும் என்று சொல்லி விட்டால், வாழ்க்கை முழுவதும் பிடிக்கும் என்று நினைத்து விடாதே.

🌼இப்பொழுதெல்லாம் மனிதர்கள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

🌼உன்னை விலக்கி யவர்களை விட்டு விடு. ஏனெனில் நீ இழந்தது ஒரு பொய்யான உண்மையை.
ஆனால் அவர்கள் இழந்ததோ உண்மையான உன்னை.

🌼உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே. தாழ்வு மனப்பான்மை வரும்.
உனக்குக் கீழே உள்ளவர்களை ஏளனமாய் பார்க்காதே. தலைகனம் வரும்.

🌼உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு தன்னம்பிக்கை வரும்.

🌼எனக்கு எல்லாமே தெரியும் என்று சொல்லிக்கொள்ளுங்கள். கவலையில்லை. ஆனால்?
அடுத்தவனுக்கு எதுவுமே தெரியாது என்று நினைத்து விடாதீர்கள்.

🌼நினைவில் வைத்துக்கொள்.பூமியே வாடகை வீடுதான். 
எல்லோரும் ஒரு நாள் வீட்டை காலி செய்து தான் ஆக வேண்டும்.

🌼என்ன நடந்தாலும் எதை இழந்தாலும்சோர்ந்து
 போகமாட்டேன். 
🌼காரணம் நான் 100 வெற்றிகளை பார்த்தவன் அல்ல.
🌼1000 தோல்விகளை பார்த்தவன்
🌹🌺💐🌹🌺💐

No comments:

Powered by Blogger.