Breaking

கொத்தமங்கலம் சுப்பு தேச பக்தர் பிறந்த தினம் பற்றிய சிறப்பு தொகுப்பு..



கொத்தமங்கலம் சுப்பு  தேச பக்தர் பிறந்த தினம் பற்றிய சிறப்பு தொகுப்பு..

 🇮🇳சுப்பு மக்கள் கவிஞர் 1910 ஆம் ஆண்டு அக்டோபர் 25-ஆம் நாள் கன்னாரியில் பிறந்தார். சுப்பு என்றாலே தேச பக்தியும், தெய்வ பக்தியும் கொண்டவர். பாடல்கள், கதைகள் எழுதுவதில் வல்லவர். திரைப்பட இயக்குனர் பல்கலை வித்தகர் ஆவார்.

🇮🇳 எழுச்சிமிக்கப் பாடல்கள், தேசிய பாடல்கள் வீறு கொள்ளச் செய்த ஒன்றாகும். காந்திமகான் காவியத்தை முதல் சுதந்திர நாளில் வெளியிட்டார். இக்காவியத்தை  பல ஆயிரம் மேடைகளில் நிகழ்ச்சிகளை நடத்தி சாதனை படைத்தவர்.

🇮🇳பந்தநல்லூர் பாமா, தில்லானா மோகனாம்பாள் போன்ற புகழ் மிக்க புதினங்களும், புன்னைவனத்துப் பூங்குயில் போன்ற படைப்புகள் எழுத்தாற்றலுக்கு எடுத்துக்காட்டாகும். ஏழாம் வகுப்பு பயின்ற இவர் பிறரை படிக்க வைக்கும் நிலையில் காரைக்குடியில் இருந்து வெளிவந்த குமரன் ,ஊழியன் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றினார். 

🇮🇳ஜெமினி திரைப்படம் நிறுவனத்தில் 20 ஆண்டுகள் பணியாற்றியதோடு இருபதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை வசனம் பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார்.

🇮🇳 அவ்வையார், தில்லானா மோகனாம்பாள் எந்த படமும் புகழை ஈட்டித் தந்தன. கலாசிகாமணி, பத்மஸ்ரீ, காந்தியச் செல்வர், படைப்பு கலைச் செம்மல்  போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.


No comments:

Powered by Blogger.