மருது சகோதரர்கள் பற்றி சிறப்பு பார்வை
அருப்புக்கோட்டையில் இருந்து பரமக்குடி செல்லும் சாலையில் நரிக்குடி எனும் ஊருக்கு அருகில் முக்குளம் கிராமம் உள்ளது. இங்கு
உடையார்சேர்வை- ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் தம்பதியினருக்கு மகன்களாகப் பிறந்தவர்கள் பெரிய மருது (1748),சின்னமருது (1753) மருது சகோதரர்கள்.
சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதத்தேவரிடம் அந்தரங்கப் பணியாளர்களாக இருந்தனர்.1772 ல் முத்துவடுகநாதத்தேவர் காளையார் கோவிலில் தனது மனைவியுடன் சாமி கும்பிடும் போது வெள்ளையர்களால்
கொல்லப்பட்டார்.
மருதுசகோதரர்கள் அதன்பிறகு வெள்ளையர்களோடு போரிட்டு 1780 ல் வேலுநாச்சியாரை சிவகங்கை அரசியாக்கினர். வெள்ளையருக்கு ஆதரவாக பாளையக்காரர்கள் யாரேனும் செயல்பட்டால் அவர்கள்
ஆண்குறி அறுத்து எறியப்படும் என்று திருச்சி மலைக்கோட்டையில்
சுவரொட்டி அடித்து ஒட்டினார்கள்.
1801 மே 28 முதல் அக்டோபர் 24வரை 150 நாட்கள் தொடர்ந்த போரிற்கு பிறகு வெள்ளையர்களால் கைது செய்யப்பட்டு 24-10-1801 ல் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர். அவர்களோடு மன்னர் குடும்பத்தை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் அன்றே தூக்கிலிடப்பட்டனர்.
வெள்ளையர்களுக்கு எதிராகப் போரிட்டு வீரமரணம் அடைந்த மருது சகோதரர்களின் வீரம் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்.
No comments: