Breaking

நீல வண்ண இயற்கை சாயம் பெயரிடும் முறை கண்டறிந்தவர்- ஜோஹன் ப்ரீட்ரிச் வில்ஹெல்ம் அடோல்ப் வான் பெயேர் பிறந்த தினம்.


 நீல வண்ண இயற்கை சாயம் பெயரிடும் முறை கண்டறிந்தவர்-
ஜோஹன் ப்ரீட்ரிச் வில்ஹெல்ம் அடோல்ப் வான் பெயேர் பிறந்த தினம்.

பிறப்பு:-

அக்டோபர் -31, 1835 ஆம் ஆண்டு,
பெர்லின், பிரஸ்ஸியா, ஜெர்மனியில் பிறந்தார்.
இவர், சிறுவனாக இருந்தபோது சோதனைகள் செய்தும், வேதியியலில் ஆர்வத்தை வளர்த்தார்.
தனது பன்னிரண்டு வயதில் தாமிரத்தின் இரட்டை உப்பைக் கண்டுபிடித்தார். 
அடீல்ஃப் தொடக்க நிலை கல்வி ப்ரீட்ரிச்-வில்ஹெல்ம்ஸ் ஜிம்னாசியாவில் பயின்றார்.
1853 ஆம் ஆண்டில் அவர் பெர்லின் பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் இயற்பியலுடன் பாடங்களை பயின்றார்.
பார்பிட்டுரிக் அமிலம் 
(barbituric acid)
பற்றி முதுகலைப் படிக்கும் போது 
ஆய்வு மேற்கொண்டு பட்டம் பெற்றார்.
1856 ஆம் ஆண்டில் அவர் ஹெடல்பெர்க்கில் ராபர்ட் வில்ஹெல்ம் எபர்டார்ட் புன்சனின் ஆய்வகத்தில் சேர்ந்தார்.
1858 இல் ககோடயல் (cacodyl) கலவைகள் பற்றி ஆய்வு செய்து தனது Ph. D பட்டம் பெற்றார்.

ஆய்வுகள்:-

யூரிக் அமிலத்தில் பணிபுரிந்தார்.
அவர் தனது முப்பது வயதிலே, ​​ இண்டிகோவில் தனது பரிசோதனையைத் தொடங்கி ஆய்வக உற்பத்திக்கான  சூத்திரத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன், பதினெட்டு ஆண்டுகளாக  வேலை செய்தார்.
மேலும் இந்த பாட்டிட்யூரிக்  அமிலத்திலிருந்தே தூக்க மாத்திரை உற்பத்தி செய்யலாம் என்ற  ஆய்வறிக்கை வெளியிட்டார்.

1860 களில் தொடங்கி, அடோல்ஃப் வான் பெயேர் சாயங்களின் வேதியியல் மீதான தொடர்ச்சியான ஆய்வுகள் செய்தார். இவை நிலக்கரி தார் இருந்து பல சாயங்கள் உற்பத்தி செய்ய வழிவகுத்தது.

1882 இல்,  'பேயர்-ட்ரூசன் இண்டிகோ சின்தசிஸ் வெளியிட்டார். இது ஆய்வக அளவிலான இண்டிகோவை தயாரிப்பதற்கான ஒரு எளிய வழியாக மாறியது.



கோட்பாட்டு வேதியியலில்  'ஸ்டேயின் பிணைப்புகள்
'strain'(Spannung)
கோட்பாடு மற்றும் சிறிய கார்பன் வளையங்களில் திரிபு கோட்பாடு போன்றவற்றில் முக்கிய பங்கு வகித்தார்.

பணிகள்:-

டாக்டர் பட்டத்தை முடித்த பின், கெகூலே பல்கலைக்கழக கௌலட்டிற்குப் பின், கெகூலேவில் பேராசிரியர் ஆனார்.

1860 இல் ராயல் டிரேட் அகாடமியில் (டி) ஒரு விரிவுரையாளராகவும், 1871 ஆம் ஆண்டில் ஸ்ட்ராஸ்பூர்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் ஆனார். 

1875 ஆம் ஆண்டில், மியூனிக்கின் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராகவும் பணியாற்றினார்.






விருதுகள்:-

1881: லண்டனில் உள்ள ராயல் சொசைட்டிவின் டேவி மெடல்,

1884: அமெரிக்க அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் பெல்லோ விருது, 

1885 ராயல் சொஸைட்டியின் ஒரு வெளிநாட்டு உறுப்பினராக இருந்தார்.

1903: ஜெர்மன் கெமிக்கல் சொசைட்டி வழங்கிய லிபிக் மெடல்,

1905: வேதியியல் நோபல் பரிசு, போன்ற விருதுகளை பெற்றார்.

இறப்பு:-

ஆகஸ்ட் -20, 1917 ஆம் ஆண்டு, 
ஸ்டார்ன்பர்க், (பவேரியா) ஜெர்மனியில் மரணமடைந்தார்.

சிறப்புகள்:-

2009 இல் சந்திரனில் உள்ள பள்ளத்தாக்குக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது.

No comments:

Powered by Blogger.