ரோசா பார்க்ஸ் நினைவு தினம்..
ரோசா பார்க்ஸ் நினைவு தினம்..
ரோசா பார்க்ஸ் ( பிப்ரவரி 4, 1913 - அக்டோபர் 24, 2005) ஒர் ஆப்பிரிக்க அமெரிக்க குடியுரிமைகள் செயற்பாட்டாளர். நவீன குடியுரிமை இயக்கத்தின் தாய் என ஐக்கிய அமெரிக்க காங்கிரசால் அழைக்கப்பட்டவர
1955 டிசம்பர் 1இல் ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது ஒரு வெள்ளைக்காரப் பயணிக்காக ஆசனத்தைத் தர மறுத்தார். இதற்காகக் கைது செய்யப்பட்டார். இந்நிகழ்ச்சி இனப் பாகுபாட்டுக்கு எதிரான இயக்கத்தைத் தோற்றுவித்தது.
இவர் அமெரிக்க மாநிலமான அலபாமாவிற்கு உட்பட்ட டஸ்கிகீ நகரில் பிறந்தார். ஜேம்ஸ் மெக்காலி, லியோனா ஆகியோர் இவரது பெற்றோர் கலப்பு இனத்தவர் ஆவார்.
தன கணவர்,பிள்ளை,சகோதரர்,தாய் என அனைவரையும் கேன்சருக்கு இழந்து தனிமையில் இருந்த பொழுதெல்லாம் மக்களின் உரிமைக்காக பேசி அதில் கிடைத்த வருமானத்தை கறுப்பின மக்களின் நலனுக்கே செலவிட்டார்.”விடுதலை போரின் தாய் !”என அழைக்கப்படும் அவரின் நினைவு தினம் இன்று.
அமெரிக்க தேசிய சிலை காட்சியகத்தில் அமெரிக்காவின் முன்னோடிகளின் சிலைகள் உள்ளன. அங்கு வைக்கப்பட்டுள்ள சிலைகளில் முதல் அமெரிக்க வாழ் ஆப்பிரிக்கரின் சிலை இவருடையதே.
2013 இல் இவரைப் போற்றி அஞ்சல் தலைகளை வெளியிட்டது அமெரிக்க அரசு.
No comments: