இலட்சியத்தை அடைய வேண்டுமானால் உங்களது மனோபாவம் மிக இயற்கையாக ஏழு குணங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்கிறார் நெப்போலியன் ஹில்.
இலட்சியத்தை அடைய வேண்டுமானால் உங்களது மனோபாவம் மிக இயற்கையாக ஏழு குணங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்கிறார் நெப்போலியன் ஹில். அவை,
1. தைரியமாக எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் குணம்.
2. கற்பனைத் திறமையுடன் எதையும் பார்க்கும் குணம்.
3. ஆழ்ந்து சிந்தித்து வேலைகளை ஒழுங்குப் படுத்தி, அமைக்கும் குணம்.
4. சிந்தனையைச் சிதறவிடாது ஒருமுகப்படுத்திக் கவனமுடன் செயல்படுவது.
5. நேரத்தையும் பணந்தையும் திட்டமட்டுச் செலவு செய்வது.
6. எப்போதும் சுறுசுறுப்புடனும், ஊக்கத்துடனும் மனத்தை வைத்திருப்பது.
7. தன்னை அடக்கித் திருத்திக் கொள்ளல்.
போர் முடிந்த இரவு வேளையில், போர்க்களத்தில் ஒருவர் புத்தகம் வாசித்துக் கொண்டு இருந்தார்...
அந்த நபரைப் பார்த்த ஒரு பெண்மணி கேட்டார், ‘ஏன் எல்லோரும் ஓய்வெடுத்து உறங்கிக் கொண்டு இருக்கும் வேளையில் நீ மட்டும் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறாய்?’ என்று.
அதற்கு அந்த நபர் சொன்னார், ‘இன்று சிப்பாயாக பணிபுரியும் நான் இந்தப் படைக்கு ஒருநாள் தலைவனாக ஆக வேண்டுமென்று’.
அப்படி தன் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட நபர், பின்னாளில் அந்தப் படைக்கு மட்டுமல்ல, அந்த நாட்டுக்கே மன்னன் ஆனார்.
அவர் வேறு யாருமில்லை பிரான்ஸ் நாட்டையாண்ட "மாவீரன் நெப்போலியன் தான்".
No comments: