தேசிய ஒற்றுமை தினம்
சிறு துண்டுகளாக இருந்த பாரதத்தை
சிரத்தை எடுத்து சிகரம் கொண்ட
சிறப்புமிக்க சீர்மிகு இந்தியா அமைத்திட
அரும்பாடுபட்ட இரும்பு மனிதர்
வல்லபாய் பட்டேல் போல் உறுதிகொண்டு
தாய் நாட்டில் அகிம்சை வழியில் போராடி
தன்னுயிரை ஈந்த மகாத்மா போல்
பாரதத்திற்கு தன்னையே தியாகம் செய்த
ஆசிய ஜோதியின் அரும் தவப்புதல்வி
அகில பாரதம் ஆட்சி செய்த
ஆற்றல் மிக்க வீரப் பெண்மணி
அணு சக்தி அமைத்த
அன்னை இந்திராவின் தியாகம் போற்றி
ஒருங்கிணைந்த பாரதம் ஒற்றுமை பாரதம்
வன்முறை இல்லாத பாரதம் உருவாக
வானில் இருமுறை தோன்றி நீல நிலவாக
அதிசயம் நிகழ்த்தும் பவுர்ணமி
ஒளி தரும் சந்திர ஒளி போல
சுகம் கொடுத்து அகம் பதித்து
நிலம் குளிர மகிழ்வு பெறும் நாள்
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
No comments: