Breaking

டிசம்பர் - 01. எண் தேற்றம், கணிதப் பகுப்பாய்வு துறையில் சிறந்து விளங்கிய இங்கிலாந்து கணித வல்லுநர்-ஜி.ஹெச்.ஹார்டி மறைந்த தினம்.


டிசம்பர் - 01. எண் தேற்றம், கணிதப் பகுப்பாய்வு துறையில் சிறந்து விளங்கிய 
இங்கிலாந்து கணித வல்லுநர்-ஜி.ஹெச்.ஹார்டி மறைந்த தினம்.


பிறப்பு:-

பிப்ரவரி-07, 1877 ஆம் ஆண்டு, 
இங்கிலாந்தின் சர்ரே பகுதியில்  பிறந்தார். தந்தை பள்ளியில் கலை ஆசிரியர் மற்றும் நிதி அதிகாரியாகப் பணிபுரிந்தவர். தாயும் ஆசிரியர். 2 வயதிலேயே, மில்லியன் வரை எண் களை எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார். 
இவரது கணிதத் திறனுக்காக வின்செஸ் டர் கல்லூரியில் படிக்க உதவித் தொகை கிடைத்தது. கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் ட்ரினிட்டி கல்லூரியில் கணிதவியல் பிரிவில் சேர்ந்தார். பின்னர், அக்கல்லூரியின் ஃபெலோவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1900 ஆம் ஆண்டில் அவர் இரண்டாம் கட்ட பல்கலைக்கழக இறுதி தேர்வில் (ட்ரப்போஸ் II) தேர்ச்சியடைந்து பட்டம் பெற்றார்.
 1903 ஆம் ஆண்டில் அவர் அந்த காலகட்டத்தில் ஆங்கில பல்கலைக்கழகங்களில் உயர்ந்த முதுகலை பட்டத்தை பெற்றார். 

பணிகள்:-

1906 முதல் 1942 வரையிலான காலகட்டத்தில் அவர் பல்வேறு கல்லூரிகளில் ஆசிரியராக பணியாற்றினார். இக்காலத்தில் கேம்பிரிட்ச் பல்கலைக்கழகத்தில் அவரின் வாழ்க்கை, இராமானுசனுடனான அவரின் நட்பு போன்றவற்றை இடேவிட் லேவிட் என்பவர் 2007 ஆம் ஆண்டு தி இந்தியன் கிளார்க் என்ற தலைப்பில் ஒரு புதினமாக வெளியிட்டார். 
இந்திய கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜனிடம் இருந்து 1913-ல் இவருக்கு ஒரு கடிதம் வந்தது. அதைக் கண்டதுமே, ராமானுஜனின் அறிவாற்றலைப் புரிந்துகொண்டார். அவரை அரிய பொக்கிஷமாகப் பேணிப் பாதுகாத்து வந்தார். அவருக்கு ஆசான், வழிகாட்டியாகவும் விளங்கினார்.

ஆராய்ச்சிகள்:-

ராமானுஜரை  கேம்பிரிட்ஜ் வரவழைத்தார். இருவரும் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டு கணித உலகின் மகத்தான கட்டுரைகளாகப் புகழப்படும் 5 கட்டுரைகளை எழுதினர். அதில் ‘ஹார்டி - ராமானுஜன் அசிம்டாடிக்’ சூத்திரம் மிகவும் புகழ்பெற்றதாகும்.

கணிதத் துறையில் எனது மிகப் பெரிய பங்களிப்பு ராமானுஜனைக் கண்டெடுத்ததுதான்’ என பெருமிதத்துடன் கூறுவார். தன்னடக்கம் மிக்கவர். உலகக் கணிதமேதைகளை வரிசைப்படுத்தச் சொன்ன போது, ராமானுஜனுக்கு 100 மதிப்பெண் வழங்கியவர், தனக்கு 25 மதிப்பெண் மட்டுமே போட்டுக்கொண்டார். இவரது வாழ்க்கை மற்றும் ராமானுஜனுடனான நட்பு ஆகியவற்றை தொகுத்து ‘தி இந்தியன் கிளார்க்’ என்ற நாவல் 2007-ல் வெளிவந்தது.
எட்மண்ட் லாண்டவ், ஜார்ஜ் போல்யா, இ.எம்.ரைட்  உட்பட பல கணித மேதைகளுடன் இணைந்து பல ஆய்வுகளை மேற்கொண்டார். கணிதப் பகுப்பாய்வு, எண்கணிதக் கோட்பாட்டு பகுப்பாய்வு, எண் கோட்பாடு, முழு எண் பகிர்வுகள் உள்ளிட்ட ஏராளமான கணிதக் கோட்பாடுகளை மேம்படுத்தினார்.
ராணுவம், போர், தாக்குதல் ஆகியவற்றுக்கு கணிதத்தை பயன் படுத்துவதை கடுமையாக எதிர்த்தார். ஆக்கப் பணிகளுக்கு மட்டுமே கணிதம் பயன்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கட்டுரை:-

1940 ஆம் ஆண்டில் கணித அழகியல் பற்றி எழுதிய "ஒரு கணிதவியலாலரின் தன்னிலை விளக்கம்" 
(A Mathematician's Apology) 
‘எ மேதமேடிசியன்ஸ் அபாலஜி’ என்ற கட்டுரை, சாமானியர்களுக்கும் கணிதத்தை புரியவைக்கிற அரிய படைப்பாக இருந்தது. ஒரு கணித மேதையின் ஆழ்மனம் எவ்வாறு செயல்படுகிறது, கணிதத்தால் வரும் ஆனந்தம் ஆகியவை பற்றிய இவரது அரிய சிந்தனைகள் அதில் இடம்பெற்றுள்ளன.


விருதுகள்:-

ராயல் சொசைட்டி 
ஸ்மித்தின் பரிசு- (1901),
ராயல் மெடல் -(1920),
டி மோர்கன் பதக்கம்- (1929),
சௌவென்ட் பரிசு- (1932),
சில்வெஸ்டர் பதக்கம்- (1940),
கோப்ளி மெடல்- (1947) போன்று
 ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

மறைவு:-

உலகின் தலைசிறந்த கணிதமேதைகளில் ஒருவரான இவர், டிசம்பர்-01, 1947 ஆம் ஆண்டு, கேம்பிரிட்ஜ் இங்கிலாந்தில்  மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.