Breaking

நவம்பர் -04. இந்திய தாவரவியல் அறிஞர் - ஜானகி அம்மாள் அகவை தினம்..


இந்திய தாவரவியல் அறிஞர் - ஜானகி அம்மாள் அகவை தினம்..


ஜானகி அம்மாள் (நவம்பர் 4, 1897 - பிப்ரவரி 1984)
கேரள மாநிலம், தலச்சேரியைச் சேர்ந்தவர்.1931-ம் ஆண்டு அமெரிக்காவில் தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண் ஆனார். படிக்கும் காலத்திலேயே, சைட்டோஜெனெடிக்ஸ் எனப்படும் மரபணு ஆய்வில் அதிக ஆர்வம்கொண்டிருந்த ஜானகி, `ஜானகி பிரிஞ்சால்’ எனப்படும் புதிய வகைக் கத்திரியை உருவாக்கினார்.
சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியையாகப் பணியாற்றியவர்.
கோயம்புத்தூரில் 1930இல் கரும்பு, மூங்கில் ஆகியவற்றின் மரபணு ஆராய்ச்சியில் இவரது பங்களிப்பு சிறப்பாக இருந்தது.பொட்டானிக்கல் சர்வே ஆஃப் இந்தியாவைப் புனரமைத்தார் ஜானகி. மண்டலங்கள், பிரிவுகள் என நிர்வாகத்துக்கு ஏற்றாற்போல மாற்றியமைத்தார். அதன் நிர்வாகப் பொது இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார். அறிவியல் மையம் ஒன்றின் மிக உயர்ந்த பதவியில் அமர்ந்த முதல் பெண்ணாகவும் ஆனார் ஜானகி.தன் இறுதி மூச்சு வரை மரபியல் ஆய்வில் ஈடுபட்டிருந்தார்.
இளம் மாணவர்களையும் அறிவாளிகளையும் ஊக்கப்படுத்த 1999ல் ஜானகி அம்மாள் விருது உருவாக்கப்பட்டது.

No comments:

Powered by Blogger.