Breaking

நவம்பர் - 09. தமிழக எழுத்தாளர் - வல்லிக்கண்ணன் மறைந்த தினம்.

நவம்பர் - 09. தமிழக எழுத்தாளர் - 
வல்லிக்கண்ணன் மறைந்த தினம். 

இவரது தந்தை ரா.மு. சுப்பிரமணிய பிள்ளை, தாய் மகமாயி அம்மாள். 1930 களிலும், 40களின் துவக்க ஆண்டுகளிலில் லோகசக்தி, பாரதசக்தி போன்ற பத்திரிகைகளில் வல்லிக்கண்ணன் கதைகளும், உணர்ச்சிகரமான கட்டுரைகளும் பாடல்கள் என ரா. சு. கிருஷ்ணஸ்வாமி என்றும், ராசுகி என்ற பெயர்களில் எழுதத்துவங்கினார். அந்தச் சமயத்தில் தனக்கு ஒரு புனைபெயர் தேவை என எண்ணினார். இதையடுத்து அவரது சொந்த ஊரான ராஜவல்லிபுரத்தில் உள்ள வல்லியையும் கிருஷ்ணஸ்வாமி என்ற தன்பெயரை கண்ணன் என மாற்றி இரண்டையும் இணைத்து, வல்லிக்கண்ணன் என்ற பெயரில் எழுதத்தொடங்கியவர். எழுத்தாளராக வேண்டும் என்பதற்காகவே அரசுப் பணியிலிருந்து விலகியவர். அரசுப் பணியிலிருந்து விலகிய பின்னர் தொடக்கத்தில் இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பின்னர் சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவருடைய சிறுகதைகளில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. இவருடைய பெரிய மனுஷி எனும் சிறுகதை அனைத்து இந்திய மொழிகளிலும் நேரு பால புத்தக வரிசையிலும் வெளிவந்துள்ளது. இவர் எழுதிய "வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.


கல்யாணி முதலிய சிறுகதைகள் - 1944
நாட்டியக்காரி - 1944
உவமை நயம் (கட்டுரை) - 1945
குஞ்சலாடு (நையாண்டி பாரதி ) - 1946
கோயில்களை மூடுங்கள்! (கோர நாதன்) கட்டுரை - 1946
பாரதிதாசனின் உவமை நயம் - 1946
ஓடிப் போனவள் கதை (சொக்கலிங்கம்) - கதை - 1948
அடியுங்கள் சாவுமணி (மிவாஸ்கி) கட்டுரை - 1947
சினிமாவில் கடவுள்கள் (கோரநாதன்) கட்டுரை -1948
மத்தாப்பு சுந்தரி (கதை) - 1948
நாசகாரக் கும்பல் (நையாண்டி பாரதி) நாடகம் - 1948
ராதை சிரித்தாள் - 1948
கொடு கல்தா (கோரநாதன்) கட்டுரை - 1948
எப்படி உருப்படும்? (கோரநாதன்) கட்டுரை - 1948
விடியுமா? நாடகம் - 1948
ஒய்யாரி (குறுநாவல்) - 1949
அவள் ஒரு எக்ஸ்ட்ரா (குறுநாவல்)- 1949
கேட்பாரில்லை (கோரநாதன்) கட்டுரை - 1949
அறிவின் கேள்வி (கோரநாதன்) - கட்டுரை - 1949
விவாகரத்து தேவைதானா ( கட்டுரை) - 1950
நல்ல மனைவியை அடைவது எப்படி? (கட்டுரை) - 1950
கல்யாணத்துக்குப் பிறகு காதல் புரியலாமா ? (கட்டுரை) - 1950
கல்யாணம் இன்பம் கொடுப்பதா? இன்பத்தைக் கெடுப்பதா? - 1950
அத்தை மகள் (குறுநாவல்) - 1950
முத்தம் (குறுநாவல்) - 1951
செவ்வானம் (கோரநாதன்) நாவல் - 1951
கடலில் நடந்தது ( கார்க்கி கதைகள் (மொழியாக்கம் )- 1951
இருளடைந்த பங்களா (கதை) - 1952
வல்லிக் கண்ணன் கதைகள் (கயிலைப் பதிப்பகம்)
நம் நேரு (வரலாறு) - 1954
விஜயலட்சுமி பண்டிட் (வரலாறு) - 1954
லால்ஸ்டாய் கதைகள் (மொழியாக்கம்)- 1957
சகுந்தலா (நாவல்) - 1957
கார்க்கி கட்டுரைகள் (மொழியாக்கம்) - 1957
சின்னஞ்சிறு பெண் (மொழியாக்கம்) - 1957
தாத்தாவும் பேரனும் (மொழியாக்கம் ) - 1959
விடிவெள்ளி (குறுநாவல்) - 1962
அன்னக்கிளி (நூல்) - 1962
ஆண் சிங்கம் (சிறுகதைகள்) - 1964
முத்துக் குளிப்பு (கட்டுரைகள் ) - 1965
வசந்தம் மலர்ந்தது (நாவல்) - 1966
வீடும் வெளியும் (நாவல்) - 1967
அமர வேதனை (கவிதை) - 1974
வாழ விரும்பியவன் (சிறுகதை)- 1975
புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (கட்டுரை) - 1977
ஒரு வீட்டின் கதை (நாவல்) - 1979
காலத்தின் குரல் (60 கேள்வி பதில்) - 1980
சரச்வதி காலம் கட்டுரை) - 1980
நினைவுச் சரம் (நாவல்)- 1980
அலைமோதும் கடல் ஓரத்தில் (நாவல்) - 1980
பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை (கட்டுரை) - 1981
இருட்டு ராஜா (நாவல்) - 1985
எழுத்தாளர்கள்-பத்திரிககள்- அன்றும் இன்றும் (கட்டுரை) - 1986
ராகுல் சாங்கிருத்யாயன் (சாகித்ய அகாடமி B.B.சிற்பி) -1986
சரஸ்வதி காலம் - 1986
புதுமைப்பித்தன் (சாகித்ய அகாடமி B.B.சிற்பி) - 1987
வாசகர்கள் விமர்சகர்கள் (கட்டுரை) - 1987
மக்கள் கலாசாரத்த மண்ணாக்கும் சக்திகள் - 1987
வல்லிக் கண்ணனின் போராட்டங்கள் (கட்டுரை) - 1988
அருமையான துணை (சிறுகதைகள்) - 1991
மன்னிக்கத் தெரியாதவர் (குறுநாவல் தொகுப்பு) - 1991
தமிழில் சிறு பத்திரிகைகள் (கட்டுரை) - 1991
வல்லிக் கண்ணனின் கதைகள் (மணியன் பதிப்பகம்) - 1991
மனிதர்கள் சிறுகதைகள் - 1991
ஆர்மீனியன் சிறுகதைகள் (மொ.பெ) - 1991
சுதந்திரப் பறவைகள் (சிறுகதைகள்)- 1994
சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொ. பெ.)-995
சமீபத்திய தமிழ் சிறு கதைகள் ( N. B. T.தொகுப்பு )
பெரிய மனுஷி (சிறு கதை N.B.T.(பால புத்தக வரிசை ).
வல்லிக் கண்ணன் கடிதங்கள் (கடிதங்கள் ) - 1999
தீபம் யுகம் (கட்டுரை) - 1999
வல்லிக்கண்ணன் கதைகள் (சிறுகதைகள் - இராஜராஜன் பிரசுரம்)- 2000.

No comments:

Powered by Blogger.