நவம்பர் - 10 உலக அறிவியல் தினம் பற்றிய தொகுப்பு..
நவம்பர் - 10
உலக அறிவியல் தினம் பற்றிய தொகுப்பு..
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10-ஆம் தேதி வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இது அறிவியல் தினம் என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகிறது.இந்த தினத்தைக் கொண்டாடுவதன் மூலம் நமது சமூகத்தில் அறிவியலின் பங்கை உணர்த்தலாம்.
மேலும் அறிவியல் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்தும், நமது அன்றாட வாழவில் அறிவியலின் முக்கியத்துவம் குறித்தும் ஒரு பரவலான விவாதத்தை உருவாக்கலாம். இந்த ஆண்டில் அறிவியல் தினம் கொண்டாடுவதன் முக்கிய நோக்கமாக அறிவியல் சமூகத்திற்கு ஆற்றிய முக்கிய பங்களிப்புகளை நினைவு கூறும் விதமாக அறிவியல் மையங்கள் மற்றும் அறிவியல் அருங்காட்சியகங்களை நாடு முழுவதும் உருவாக்குவது பற்றி கவனம் செலுத்தப்பட உள்ளது.
No comments: