Breaking

நவம்பர் - 11, முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை அவர்களைப் பற்றிய சிறப்புகள்..

நவம்பர் - 11, முத்தமிழ் காவலர் 
கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை 
அவர்களைப் பற்றிய சிறப்புகள்..

தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர். துவக்கத்தில் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோதும் அவரது திராவிடநாடு கோரிக்கையுடன் உடன்படாதவர். அது தமிழரின் தனித்தன்மையை நீர்த்துவிடும் என எண்ணினார். இவர் எழுதியுள்ள 23 நூல்களும் தமிழ்வளர்ச்சித்துறையால் 2007-2008 இல் நாட்டுடைமையாக்கப்பட்டு பரிவுத் தொகை 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

தமிழ் இலக்கண கடலான இவர் பள்ளிக்கு சென்றதில்லை. ஐந்தாவது வயதில் முத்துச்சாமிக் கோனாரிடம் மணலில் தமிழ் எழுத்துகளை எழுதிப் பயிற்சி பெற்றார். நாவலர் வேங்கடசாமி நாட்டார், மறைமலையடிகள்,           திரு.வி.க, நாவலர் சோமசுந்தர பாரதியார் முதலிய தமிழறிஞர்கள் தொடர்பால் தாமாக முயன்று தமிழ் இலக்கண-இலக்கியங்களைக் கற்றுப் புலமை பெற்றார்.முதல் இந்தி எதிர்ப்புப்போரில் (1938) தந்தை பெரியாரோடும், தமிழறிஞர்களோடும் கைகோத்துப் போராடிய முதன்மைப் போராளியே    கி.ஆ.பெ. விசுவநாதம்.
1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் மக்களை தூண்டியதாகக் கூறி இரண்டு மாதம் சிறையிலடைக்கப்பட்டார். அதன் காரணமாக கி. ஆ. பெ. விசுவநாதம் தனது மகள் மணிமேகலை திருமண உறுதியேற்பாடு நிகழ்வுக்கு செல்ல முடியவில்லை. தன் வாழ்நாளின் இறுதியில் தமிழீழ விடுதலைப் போருக்கு துணை நின்றார்.

விருதுகள்

1956ஆம் ஆண்டு திசம்பர் 17ஆம் நாள் திருச்சி தேவர் மன்றத்தில் நடைபெற்ற விழாவில் "முத்தமிழ்க் காவலர்" என்னும் பட்டத்தை, அன்றைய அண்ணாமலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் டி.எம்.நாராயணசாமியால்திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது.

1965ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற சித்த மருத்துவ மாநாட்டில் "சித்த மருத்துவ சிகாமணி" விருது வழங்கப்பட்டது
1975ஆம் ஆண்டு தமிழ்நாட்டு நல்வழி நிலையம் "வள்ளுவ வேல்" என்னும் விருது வழங்கியது.2000ஆம் ஆண்டிலிருந்து கி. ஆ. பெ. விசுவநாதம் விருது அவர்களின் பெயரில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ்நெறியில் தமிழ்த் தொண்டாற்றும் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
இவரது நினைவில் ஐந்து ரூபாய் தபால் தலை இந்திய தபால் துறை சார்பில் வெளியிடப்பட்டது.


1997ல் முதல்வர் கருணாநிதி திருச்சியில் துவக்கிய மருத்துவக் கல்லூரிக்கு கி. ஆ. பெ.யின் பெயர் சூட்டப்பட்டது...

இயற்றிய நூல்கள்

அறிவுக்கதைகள் (1984)
அறிவுக்கு உணவு (1953)
ஆறு செல்வங்கள் (1964)
எண்ணக்குவியல் (1954)
எது வியாபாரம்? எவர் வியாபாரி? (1994)
எனது நண்பர்கள் (1984)
ஐந்து செல்வங்களும் ஆறு செல்வங்களும் (1950)
தமிழ் மருந்துகள் (1953)
தமிழ்ச்செல்வம் (1955)
தமிழின் சிறப்பு (1969)
திருக்குறள் கட்டுரைகள் (1958)
திருக்குறள் புதைபொருள் - பாகம் 1 (1956)
திருக்குறள் புதைபொருள் - பாகம் 2 (1974)
திருக்குறளில் செயல்திறன் (1984)
நபிகள் நாயகம் (1974)
நல்வாழ்வுக்கு வழி (1972)
நான்மணிகள் (1960)
மணமக்களுக்கு (1978)
மாணவர்களுக்கு (1988)
வள்ளலாரும் அருட்பாவும் (1980)
வள்ளுவர் (1945)
வள்ளுவரும் குறளும் (1953)
வானொலியிலே (1947)

No comments:

Powered by Blogger.