நவம்பர்-12. உலக நுரையீரல் அழற்சி நாள் (World Pneumonia Day) ..பற்றிய தகவல்கள்..
20:30
Read
நோக்கம்..
நுரையீரல் அழற்சி நோய் பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் உணர்த்தும் வகையில் ஆண்டு தோறும் நவம்பர் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
துவக்கம்
சிறுவர்களின் நலனைப் பிரதிநிதித்துவப் படுத்தும் நூற்றுக்கும் அதிகமான உலகளாவிய அமைப்புகள் இணைந்து 2009 ஆம் ஆண்டு நவம்பர்-02 ஆம் தேதி முதலாவது உலக நுரையீரல் அழற்சி நாள் கொண்டாடப்பட்டது. பிறகு, 2010 ஆம் ஆண்டு முதல் நவம்பர்-12 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
நிமோனியா:-
நிமோனியா என்பதை சீதசன்னி, சளிக்காய்ச்சல், நுரையீரல் காய்ச்சல், நுரையீரல் அழற்சி என்றும் கூறலாம். நுரையீரல்களின் காற்றுப் பைகளில் கிருமிகளின் தாக்குதலால் உண்டாவது நிமோனியா. இந்தக் கிருமிகள், நுண்ணுயிர்கள் அல்லது மிகச் சிறிய நுண்ணுயிர்கள் வகைகளைச் சேர்ந்த காளான்களாகவும் இருக்கலாம். காளான் வகையில் நியூமோசிஸ்ட்டிஸ் காரின்னி (Pneumocystis Carinii) இதற்கு முக்கிய காரணமாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகளை பொதுவாக இந்த நோய் அதிகளவில் தாக்குகிறது. இதன் கிருமிகள் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் இரண்டு நுரையீரலில் உள்ள காற்றுப் பைகளை பாதித்து அவைகளை செயல் இழக்க செய்து மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைகள் சுவாசிக்க முடியால் இறக்கிறது.
உலகளாவிய அளவில் நியூமோனியா நோய் தாக்கத்தால் ஆண்டுக்கு சராசரியாக 1.6 மில்லியன் பேர் இறக்கின்றனர். 5 வயதிற்கும் குறைந்த 155 மில்லியன் குழந்தைகள் பாதிப்படைகின்றனர். இது எயிட்சு,
மலேரியா, எலும்புருக்கி நோய் போன்றவற்றினால் இறப்பு ஏற்படுவதை விட அதிகம் என மருத்துவ சங்க குறிப்பு தெரிவிக்கின்றது.
நியூமோனியா, நுரையீரல், தொற்று மூளை சவ்வு பாதிப்பு, ரத்தத்தில் நோய் கிருமிகள் கலப்பு, காதில் நோய் பாதிப்பு, சைனஸைடிஸ் போன்ற வகை கொண்டது. பச்சிளம் குழந்தை, குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இருக்கும் வளர்ச்சியடையாத நுரையீரல், குறுகிய மூச்சுக்குழல், ஊட்டச்சத்து பற்றாக்குறை, வளர்ச்சியடையாத நோய் எதிர்ப்பு மண்டலம் போன்ற காரணங்களால், இத்தகைய தொற்றுநோய் ஏற்படுவதாக மருத்துவச் செய்தி கூறுகின்றது.
விழிப்புணர்வு அவசியம்:-
சாதாரணமாக காய்ச்சல் குழந்தைக்கு வந்தால் கூட, அலட்சிய படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதன் மூலம் குழந்தைகளை நிமோனியா போன்ற கடுமையான நோய் பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும் என்பது மருத்துவர்களின் ஆலோசனையாக உள்ளது.
நவம்பர்-12. உலக நுரையீரல் அழற்சி நாள் (World Pneumonia Day) ..பற்றிய தகவல்கள்..
Reviewed by JAYASEELAN.K
on
20:30
Rating: 5

Tags :
NOVEMBER
No comments: