Breaking

நவம்பர்-12. இந்திய பறவையியல் வல்லுநர் - சலீம் மொய்சுதீன் அப்துல் அலி பிறந்த தினம்.


நவம்பர்-12.


இந்திய பறவையியல் வல்லுநர் - சலீம் மொய்சுதீன் அப்துல் அலி பிறந்த தினம்.

பிறப்பு:-

1876 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் நாள் அன்றைய பம்பாய் மாநிலத்தில் கேத்வாடி (Khethwadi) என்ற ஊரில் பிறந்தார். இளம் வயதில்  சின்னஞ்சிறு சிட்டுக் குருவியை சுட, அது இறந்து வீழ்ந்தது, இறந்துபோன அக்குருவியின் கழுத்தில் திட்டாக மஞ்சள் நிறக் கறை படிந்திருப்பதைக் கண்டார்.பிறகு இதற்கான காரணத்தைத் அறிய  பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் கெளரவச் செயலராக இருந்த டபுள்யூ.எஸ்.மில்லர்ட் (W S Millard) என்பவரிடம் அறிமுகமாகி,
மில்லர்டின் உதவியுடன் பறவைகளை எவ்வாறு அறிந்துகொள்வது, எப்படிப் பாதுகாப்பது போன்ற விவரங்களை  தெரிந்து கொண்டார்.
அப்பொழுதிலிருந்து சலீம் அலிக்கு பறவைகள் மீது தீராத நாட்டம் பிறந்தது. 
மேலும்,புதுப்புது பறவை மாதிரிகள், இறகுகளை சேகரித்தார். மீண்டும் மும்பை திரும்பி விலங்கியல் படித்தார். பின்னர், தேசிய வரலாற்றுக் கழக அருங்காட்சியகத்தில் ‘கைடு’ (வழிகாட்டி) வேலை கிடைத்தது. பிறகு,
பறவையியலில் அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள ஜெர்மனி சென்று டாக்டர் இர்வின் ஸ்ட்ராஸ்மனிடம் பயிற்சி பெற்று நாடு திரும்பினார்.

பறவையியல் ஆராய்ச்சிகள்:-

வீட்டுத்தோட்டத்திலிருந்த மரத்தடியில் உட்கார்ந்து
கொண்டு பறவைகளை நோட்டம் விடுவது வழக்கம், அங்கிருந்த தூக்கணாங்குருவியின் 
வாழ்க்கை முறையைக் கூர்ந்து கவனித்து, அதைப்பற்றிய எல்லா விவரங்களையும் குறித்துக்கொண்டார். 1930 ஆம் ஆண்டு தான் திரட்டிய குறிப்புகளைக்கொண்டு, தூக்கணாங்குருவியின் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள் ஆகியவை பற்றிய ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிட்டார். 
மேலும், பறவைகளைப் பற்றிய ஆய்வு மேற்கொள்ள இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றார். பறவைகளைப் பற்றியும் அவற்றின் ஒவ்வொரு செயலையும் கூர்ந்து கவனித்து, ஆய்வு செய்து பின்னரே தகுதியான முடிவுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

பறவையியல் ஆராய்ச்சி செய்த முக்கிய இடங்கள்:-

பரத்பூர்,
மேற்குத் தொடர்ச்சி மலைகள்,
கிழக்குத் தொடர்ச்சி மலைகள்,
இமாலய மலைகள்,
கிழக்கு இமாலய மலைகள்,
இராஜஸ்தானின் பாலைவனங்கள்,
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் பனிச் சிகரங்கள்,
மியான்மர்,
நேபாளம்,
தக்கான பீடபூமி.

நூல்கள்:-

பறவைகளின் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கங்கள், இனப்பெருக்கம், வலசைபோதல் குறித்து ஏராளமான கட்டுரைகள், நூல்கள் எழுதியுள்ளார். ‘இந்திய, பாகிஸ்தான் பறவைகளின் கையேடு’, சுயசரிதை நூலான ‘சிட்டுக்குருவியின் வீழ்ச்சி’ ஆகியவை உலகப் புகழ் பெற்றவை. ‘இந்தியப் பறவைகள் பற்றிய கையேடு’ (The HandBook on Indian Birds)
என்ற புத்தகம் மொத்தம் 13 முறை மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.விருதுகள்:-

பத்ம பூஷண்-(1958),
பிரித்தானியப் பறவையியல் கழகத்தின் விருது-(1967),
ஜோன் சி. பிலிப்ஸ் விருது(World Conservation Union - 1969),
பத்ம விபூஷண்-(1976),
Commander of the Netherlands (Order of the Golden Ark)-(1986) போன்ற விருதுகள் பெற்றார்.


இறப்பு:-

பறவைகளைப் பற்றிய நடமாடும் கலைக் களஞ்சியம்’, பறவை மனிதர் என்றழைக்கப்பட்ட இவர், 1987 ஆம் ஆண்டு ஜூன்-20 ஆம் நாள் மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.