நவம்பர் 14.. இன்றைய நாளின் சிறப்புகள்..
இன்று உலக நீரிழிவு தினம் :-
உலக நீரிழிவு தினம் என்பது உலகிலுள்ள 14 வயதுக்கு குறைவான குழந்தைகளில் 60 லட்சம் பேருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளது. நீரழிவு நோய் பற்றிய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதை எப்படி சமாளித்து வாழ வேண்டும் என்று அறிவுறுத்துவது பற்றியும் நவம்பர் மாதம் 14ஆம் தேதி உலக நீரிழிவு தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக கழிவறை தினம்.. பொதுவாக மனிதர்களை நோய்கள் தாக்க காரணம் கிருமிகள் தான்.கிருமிகள் கழிவறை மற்றும் சுத்தமில்லாத இடங்களில் இருந்து வருகின்றன இன்று உலகம் முழுவதும் 100 கோடிபேர் சுகாதாரமற்ற சூழ்நிலை வாழ்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. திறந்தவெளி கழிவறைகள் பயன்படுத்தும் நாடுகள் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் அதிகம். சுகாதாரம் இல்லாமல் வாழும் மக்களின் மீது கரிசனம் கொ ண்டு அன்று 2001 நவம்பர் 14 உலக கழிவறை இயக்கம் ஒன்று அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. ஆரோக்கிய வாழ்வு கழிவறை சுத்தத்தில் அவசியம் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகக் கருதப்படுகிறது. நேதாஜி நினைவாக முதன்முதலாக நாணயம் வெளியிட வெளியிடப்பட்ட தினம்:...நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய தேசியப் படையை நிறுவிய நிறுவனரும் ஆவார், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் தலைசிறந்த நிறுவனரும் தீவிரவாதத் தலைவரும் ஆவார் அவரின் நினைவாக 1964 ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி நாணயம் வெளியிடப்பட்டது.
No comments: