Breaking

நவம்பர் -15.. பூமிதான இயக்கத்தை தொடங்கிய ஆச்சாரிய வினோபா பாவே நினைவுநாள்..


நவம்பர் -15.. பூமிதான இயக்கத்தை 
தொடங்கிய ஆச்சாரிய வினோபா பாவே நினைவுநாள்..


பூமிதான இயக்கத்தை தொடங்கி நிலமில்லா பல்லாயிரக்கணக்கான ஏழைகள் நில உரிமை பெற முக்கிய காரணமாக அமைந்த ஆச்சார்ய வினோபாபாவே அவர்களின் நினைவு நாள் இன்று 

மகாத்மா காந்தியின் ஆன்மீக சீடர் என கருதப்படும் ஆச்சாரிய பாபாவேஅவர்கள்மகாராஷ்டிர  மாநிலத்தில் 1895 செப்டம்பர் 11ஆம் நாள் பிறந்தார். தாயின் கண்காணிப்பில் மஹாராஷ்ட்ர தத்துவஞானிகளின், அறிஞர்களின் நூல்களைக் கற்றார். கணிதத்தில் நல்ல திறன் பெற்றிருந்தார். 1916 இல் காசியில் சமஸ்கிருத நூல்களை கற்றார். இந்து பல்கலைகழகத்தில் காந்திஜி ஆற்றிய உரையாடல் மூலம் ஈர்க்கப்பட்டார். காந்திஜியோடு கடிதம் மூலம் நல்ல உறவை வளர்த்துக்கொண்டார். 1916 ஜூன் 7ஆம் நாளில் காந்திஜியை அஹமதாபாத்தில் நேரில் சந்தித்து அவரது சீடரானார். அவரது ஆசிரம வாழ்வில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்துக்கொண்டார். 1921 இல் காந்தி வினோபாவை ஆசிரமத்தின் தலைவராக தியமித்தார். தர்மா என்ற மராத்திய மொழி மாத இதழை 1923 இல் தொடங்கினார். காதி, கிராம தொழில்களை மேம்படுத்தல், காந்திய முறைக்கல்வி, சுத்தம் மற்றும் சுகாதாரம் போன்ற காந்திய வழிகளை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டினார். 1932 இல் நாவல்டி ஆசிரமத்தில் பணிபுரியலானார். வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட விடுதலை போராட்டங்களில் ஆர்வமுடன் பங்கேற்ற இவர் காந்தியின் மறைவிற்கு பின் அவரின், கொள்கைக்கு செயல் வடிவம் கொடுத்தார். ஏப்ரல் 18, 1951இல் பூமிதான இயக்கத்தை தொடங்கினார்.
(ஊர் ஊராக நடந்து சென்று    அதிகமாக நிலம் வைத்திருந்த தனவந்தர்கள் இடமிருந்து அன்பளிப்பாக நிலத்தைப் பெற்று நிலமற்ற ஏழைகளுக்கு இலவசமாக கொடுப்பது தான் பூமிதான இயக்கம்.) இதன் சிறப்பை கண்டு உலகமே அவரை உற்று நோக்கியது. 14 ஆண்டுகளில் 7000 கிலோமீட்டர் நடந்தே சென்று இப்பணியை தொடர்ந்தார். 42 லட்சம் ஏக்கர் நிலம் நன்கொடையாக பெறப்பட்டு நிலமற்ற கூலி ஏழைகளுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது. உலக அளவில் மிகப்பெரிய சாதனையாக இது கருதப்படுகிறது. அறிவியலும் ஆன்மீகமும் அனைவருக்கும் பயன்படக்கூடிய முறையில் செயல்படுவது
தான் சர்வோதயம் என்று விளக்கம் தந்தார். உத்திரப்பிரதேசத்தில் சம்பல் பள்ளத்தாக்குகளில் செயல்பட்டு வந்த பல பயங்கர கொள்ளைக்காரர்களை சரணடைய செய்தார். 1970இல் வயதின் காரணமாக தனது பயணங்களை குறைத்துக்கொண்டு முழுமையாக ஆன்மீகப் பணிக்கு திரும்பினார். 1982 ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் நாள் இத்தகைய வியத்தகு சாதனைகளை புரிந்த ஆச்சார்ய வினோபா பாவே அவர்கள் மறைந்தார். இவருக்கு 1984 ஆம் ஆண்டு இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது. ஏழைகளையும், தொழிலாளர்களையும், நிலமுள்ள விவசாயிகளாக மாற்றிய பெருமை வினோபா அவர்களையே சாரும் அவரை வாழ்த்துவோம் அவரது நினைவு நாளில் அவரை நினைவு. கூர்வோம்...

No comments:

Powered by Blogger.