Breaking

நவம்பர் - 18. விண்வெளிக்குச் சென்ற 2 வது மனிதர், சந்திரனில் நடந்த 4 வது மனிதர்- அலன் பார்ட்லெட் ஷெப்பர்ட் பிறந்த நாள்...



விண்வெளிக்குச் சென்ற 2 வது மனிதர்,
சந்திரனில் நடந்த 4 வது மனிதர்-
அலன் பார்ட்லெட் ஷெப்பர்ட் பிறந்த நாள்...

நவம்பர்- 18, 1923 ஆம் ஆண்டில்
டெரி, நியூ ஹாம்ப்ஷயர்,  
அமெரிக்காவில் பிறந்தார்.
ஆடம்ஸ் பள்ளியில் ஆரம்பக் கல்வியும் 
டெரி, இல் ஓக் தெரு பள்ளியில் நடுத்தரப் பள்ளிக்குச் சென்று  எட்டாவது வகுப்பை முடித்தார்.ஷெப்பர்ட் 1940 ஆம் ஆண்டில் பின்கர்ட்டன் அகாடமி பட்டம் பெற்றார்.

1940 ஆம் ஆண்டில் அனாபொலிஸில் உள்ள அமெரிக்க கடற்படை அகாடமிக்கு அவர் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றார்.1944 இல் அவர் அமெரிக்க கடற்படை அகாடமியில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார்.

விண்வெளிப் பயணங்கள்:-


மேர்க்குரித் திட்டம்:-

1959 இல் புதிதாக உருவாக்கப்பட்ட 
நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் விண்வெளிப் பயிற்சிக்காக அழைக்கப்பட்ட 110 பயிற்சி விமானிகளுள் செப்பர்டும் ஒருவர். 
மிகவும் கடினமான பயிற்சிகளின் பின்னர் மேர்க்குரி திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்ட ஏழு விண்வெளி வீரர்களுள் இவரும் ஒருவர்.

முதலாவது அமெரிக்கராக விண்வெளிக்கு செல்ல இவர் ஜனவரி 1961இல் தேர்வு செய்யப்பட்டார். முதலில் அக்டோபர் 1960 இல் விண்வெளிக்குச் செல்லத் திட்டமிடப்பட்ட போதும் பல தடைகள் காரணமாக பயணம் மே-1961 க்கு  தள்ளிப் போடப்பட்டது. மே 5, 1961 இல், அலன் ஷெப்பர்ட் மேர்க்குரித் திட்டத்தின் கீழ் ஃப்றீடம் 7 (Freedom 7) என்ற விண்கலத்தில் 116 (statute miles) தூரத்திற்கு சென்றார்.

அப்பல்லோ திட்டம்:-

தனது 47வது வயதில் ஷெப்பர்ட் தனது இரண்டாவது விண்வெளிப் பயணத்தை 
அப்பல்லோ- 14 இல் ஜனவரி- 31, பெப்ரவரி 9, 1971 இல் சென்றார். இதுவே வெற்றிகரமாக 
சந்திரனில் தரையிறங்கிய மூன்றாவது அமெரிக்கத் திட்டமாகும். சந்திரனில் இவர் தங்கியிருந்த போது குழிப்பந்துவிளையாடியது குறிப்பிடத்தக்கது.ஆகஸ்ட்- 01, 1974 இல் இவர் நாசாவில் இருந்தும் கடற்படையில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

விருதுகள்:-

அக்டோபர் -01, 1978 இல் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் அவர்களால் கௌரவ காங்கிரஸிற்கான விண்வெளிப் பதக்கம் வழங்கப்பட்டது. 1981 -இல் அறிவியல் மற்றும் ஆய்வுக்கான கோல்டன் பிளேட் விருதையும் பெற்றார்.

1962 ஆம் ஆண்டில் டார்ட்மவுத் கல்லூரியில் மாஸ்டர் ஆப் ஆர்ட்ஸின் கௌரவ பட்டப்படிப்பு வழங்கப்பட்டது. 1971 ஆம் ஆண்டில் மியாமி பல்கலைக்கழகத்தில், 1972 ஆம் ஆண்டில் ஃபிராங்க்ளின் பியர்ஸ் கல்லூரியில் இருந்து டாக்டரேட் ஆஃப் ஹானமினியஸிலாக இருந்தார். 2006 -கடற்படையிலிருந்து  அவருக்கு வழங்கிய கப்பல் யுஎஸ்எஸ்ஸ் ஆலன் ஷெப்பர்டு (T-AKE-3) என பெயரிட்டது.

அமெரிக்க விண்வெளி வீரரும், கடற்படை விமானப் பயணியாளரும், சோதனை விமானி மற்றும் தொழிலதிபருமான இவர், சூலை- 21, 1998 ஆம் ஆண்டு, தனது 74 வது வயதில்,அமெரிக்காவில் மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.