Breaking

ஸ்புட்னிக்2 விண்கலம் மூலம் லைக்கா எனும் நாயை, சோவியத் விண்வெளிக்கு அனுப்பிய தினம்

நவம்பர் 3...

 1957ஆம் ஆண்டு ஸ்புட்னிக்2 விண்கலம் மூலம் லைக்கா எனும் நாயை,  சோவியத் விண்வெளிக்கு அனுப்பிய தினம் இன்று.

பூமியிலிருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் உயிரினம் இது. 

ஸ்புட்னிக்2 புவிச் சுற்றுப்பாதைக்கு ஏவப்பட்ட இரண்டாவது விண்கலம் ஆகும்.  

சோவியத் ஒன்றியத்தினால் ஏவப்பட்ட இவ் விண்கலத்தில் லைக்கா என்னும் பெயருடைய நாய் ஒன்று ஏற்றிச்செல்லப்பட்டது.  

விண்கலத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட முதல் உயிருள்ள விலங்கு இதுவாகும். இக்கலம் 4 மீட்டர் (13 அடி) உயரமும், 2 மீட்டர் (6.5 அடி) அடி விட்டமும் கொண்ட ஒருகூம்பு வடிவம் கொண்டது. 

இது பல ஒலிபரப்பி தொலை அளவைத் தொகுதி, கட்டுப்பாட்டு மையம், வெப்பநிலைக் கட்டுப்பாட்டுத் தொகுதி, பல அறிவியற் கருவிகள் ஆகியவற்றைக் கொண்ட பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

 இன்னொரு மூடப்பட்ட  அறையில் லைக்கா வைக்கப்பட்டது.

No comments:

Powered by Blogger.