Breaking

நவம்பர் - 20. ரஷ்ய கவிஞர் லியோ டால்ஸ்டாய் நினைவு தினம்...


ரஷ்ய கவிஞர் லியோ டால்ஸ்டாய் நினைவு தினம்...

அகிம்சை வழிப் போராட்டம் முறையை உலகிற்கு எடுத்துக் கூறிய எழுத்தாளர். இருபதாம் நூற்றாண்டில் மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்களின் அறவழிப் போராட்டங்களக்கு அடித்தளமிட்ட ரஷ்ய கவிஞர், ரஷ்ய அறிஞர் லியோ டால்ஸ்டாய் அவர்களின் நினைவு தினம் இன்று.
ரஷ்ய அறிஞர் லியோ டால்ஸ்டாய் உலகின் சிறந்த நாவலாசிரியர் ஆவார். அவர் ஒரு சிறந்த அரசியல் சிந்தனையாளரும், புகழ்பெற்ற தத்துவ ஞானியும் ஆவார்.
அவரது நாவல்கள் பொது மக்களின் வாழ்வோடு இணைந்து கருத்துக்களை காட்சிப்படுத்தி அமைக்கப்பட்டிருந்தன, அவரது போரும் அமைதியும் மற்றும் அன்னா கரினா போன்ற நாவல்கள் இன்றும் உலகில் நிலைத்து நிற்கும் புகழ்பெற்ற நாவல் நூல்களாகும்.
லியோ டால்ஸ்டாய் செப்டம்பர் 9, 1828 ஆம் ஆண்டு ஒரு புகழ்பெற்ற வசதியான குடும்பத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே பெற்றோரை இழந்தவர். 1844 ஆம் ஆண்டு காசன் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். கல்வியில் அதிக ஆர்வம் இல்லாமல் பாதியிலேயே நிறுத்திவிட்டு மாஸ்கோவிலும், செயின்ட் பீட்டர்ஸ்பர்கிலும் சூதாட்ட, கேளிக்கைகளில் தன் வாழ்க்கையை செலவழித்து பெரும் கடனாளி ஆனார். பின்னர் அதிலிருந்து மீண்டு அவர் மூத்த சகோதரர் அறிவுரைப்படி ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிந்தார். இந்த காலகட்டத்தில் தான் டால்ஸ்டாய் எழுதத் துவங்கினார். ராணுவத்தில் அவர் பெற்ற அனுபவங்களும் 1857 மற்றும் 1860 ஆகிய ஆண்டுகளில் ஐரோப்பாவில் அவர் மேற்கொண்ட  பயண அனுபவங்களும், அவரை எழுதத் தூண்டின . 1857 இல் பாரிஸ் நகரில் பொதுவிடத்தில் நடத்தப்பட்ட கொலைத் தண்டனையை பார்த்து அதிர்ந்து தன்னுடைய வாழ்க்கையை ஆன்மீக பாதை நோக்கி திருப்பினார். ஐரோப்பிய நாவலாசிரியர் விக்டர் ஹியூகோ வை 1860இல் சந்தித்து. அவரைப் போலவே நாவல் எழுதும் ஆசையை வெளிப்படுத்தினார்.
 1862 பின் நாடு திரும்பிய அவர் தம் சொந்த ஊரில் 12 பள்ளிகளை திறந்து அவற்றை திறம்பட நடத்தினார்.  ஜனநாயக கோட்பாடுகளை மாணவர்களிடம் கற்பித்தல் பணியை செய்ததால் ரஷ்ய சார் மன்னரால் அவரது கல்வி நிலையம் தடைசெய்யப்பட்டது. 
கடவுளின் அரசு உனக்குள்ளேயே இருக்கிறது என்ற அவரது நூலில் அவர் வலியுறுத்திய அகிம்சை போராட்ட முறை இன்றளவும் புகழ் பெற்றதாக உள்ளது.
டால்ஸ்டாய் என்னுடைய புத்தகத்தை நாட்டுடைமையாக்க முயற்சி மேற்க்கொள்ள, அவரது மனைவி முழு உரிமையையும் தனதாக்க முயற்சித்தார். இந்த கருத்து வேறுபாடால் குடும்பத்திலிருந்து  பிரிந்து வாழ்ந்தார். 82 வது வயதில் நவம்பர் 20ஆம் நாள் இயற்கை ஏய்தினார்.பல சிறந்த சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதிய ரஷ்ய கவிஞர் லியோ டால்ஸ்டாய் அவர்களை அவரது நினைவு நாளில் நினைவு கூறுவோம்...

No comments:

Powered by Blogger.