Breaking

நவம்பர் - 29. பூச்சிகள் சுவாசிப்பதற்கு உதவும் நுண்குழலுக்கு மூச்சுக்குழல் என்று பெயரிட்ட இத்தாலி உயிரியலாளரும், மருத்துவருமான- மார்செல்லோ மால்பிகி மறைந்த நாள்.



நவம்பர் - 29. பூச்சிகள் சுவாசிப்பதற்கு  உதவும்
நுண்குழலுக்கு மூச்சுக்குழல் என்று பெயரிட்ட இத்தாலி உயிரியலாளரும், மருத்துவருமான-
மார்செல்லோ மால்பிகி மறைந்த நாள்.

பிறப்பு:-

மார்ச்ச-10, 1628 ஆம் ஆண்டு, இத்தாலி,
 பொலோனியா அருகில் உள்ள க்ரிவால்கோர் என்ற ஊரில் பிறந்தார்.
தனது பள்ளிக் கல்வி முடிந்த பின் பொலோனியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
1653 ஆம் ஆண்டு, தத்துவம், மருத்துவம் போன்றவற்றில் முனைவர் பட்டம் பெற்றார்.

பணிகள்:-

1655 ஆம் ஆண்டு பெலோனியா பல்கலைக்கழகத்தில் தர்க்கவியல் விரிவுரையாளராக சேர்ந்து பணியாற்றினார்.
பிறகு பைசா நகரக் கல்லூரியில் கோட்பாட்டு மருத்துவத்தில் பேராசிரியராக பணியாற்றினார்.
பிறகு மெசினா (Messina) மருத்துவக் கல்லூரியில் மருத்துவத் துறை பேராசிரியராகப் பதவியேற்றார்.

கண்டுபிடிப்புகள்:-

சுவை அரும்புகள், மூளையின் அமைப்பு, பார்வை நரம்பு, கொழுப்பு தங்கும் இடங்கள், ரத்தத்தில் ஏற்படும் நிறமாற்றங்கள், உடற்கூறியல், உடல் இயங்கியல் குறித்தும் ஆராய்ந்தார்.
மைக்ரோஸ்கோப்கள் மூலம் தாவரங்கள், விலங்குகள், பூச்சிகள் உள்ளிட்ட உயிரினங்களின் உடல்கூறு கட்டமைப்புகளை ஆராய்ந்தார்.
பட்டுப்பூச்சியில் தான் செய்த ஆய்வுகளை 1669ஆம் ஆண்டு வெளியிட்டார். இவ்வகை பூச்சிகளுக்கு சுவாசிப்பதற்கு நுரையீரல் கிடையாது என்றும், இவைகள் உடலின் பக்கவாட்டுத்துளைகள் மூலமாக வாயுமண்டல காற்றை உள்ளிழுத்து, நுண்குழல்கள் வழியாக சுவாசிக்கின்றன என்று விளக்கினார். இந்த நுண்குழலுக்கு மூச்சுக்குழல் எனவும் பெயரிட்டார்.
நுரையீரல் செல்களை சோதனை செய்து பார்த்து அங்கு சிறிய மெல்லிய சுவர் கொண்ட ரத்த நுண் குழாய்கள் இருப்பதைக் கண்டார். இவைதான் தமனிகளையும் சிரைகளையும் இணைக்கின்றன என்பதையும் அவை ரத்தத்தை இதயத்தை நோக்கிச் செலுத்துகின்றன என்பதையும் அங்கு நடைபெறும் அனைத்து வேலைகளையும் இவைதான் நிகழ்த்துகின்றன என்பதையும் ஆராய்ந்தறிந்து கூறினார்.
மேலும் இவர் கண்டறிந்த தகவல்கள் நுண்ணியல் உடற்கூறியல் (microscopic anotomy) அறிவியலுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன.
சுற்றோட்ட, நிணநீர் ஓட்டத்தோடு தொடர்புடைய மால்பிஜியன் துகள்கள், புறத்தோல் திசுவில் காணப்படும் மால்பிஜியன் அடுக்கு, பூச்சிகளில் காணப்படும் மால்பிஜியன் குழல்கள் இதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.பூச்சிகளில் மால்பிஜியன் குழல்கள் நைட்ரஜன் அடங்கிய கழிவுப் பொருள்களான யூரிக் அமிலம் மற்றும் நீரை மலத்திலிருந்து வெளியேற்றுகின்றன என்பதை மால்பிஜி கண்டறிந்தார்.


மறைவு:-

நவம்பர்-29, 1694 ஆம் ஆண்டு, இத்தாலி
ரோம் நகரில் மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.