Breaking

டிசம்பர் - 31 வரை பள்ளிகள் திறப்பு இல்லை.. அறிவித்த மாநில அரசு..


டிசம்பர் - 31 வரை பள்ளிகள் 
திறப்பு இல்லை.. அறிவித்த மாநில அரசு..

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நடப்பு கல்வியாண்டின் பள்ளி கல்லூரிகள் இன்னும் திறக்கப்படாத நிலை உள்ளது. ஒரு சில மாநிலங்களில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு, பின்னர் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில். கொரோனா தொற்று பரவல் காரணமாக மிசோரம் மாநிலத்தில் நடப்பாண்டின் இறுதிவரை பள்ளிகள் திறக்கப்பட்டது என மிசோரம் மாநில அரசு அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மிசோரம் மாநிலத்தில் கடந்த அக்டோபர் மாதம் 16ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறக்கப்பட்ட சில நாட்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகமாகியது. இதனால் பள்ளிகள் திறப்பதை அம்மாநில அரசு கைவிட்டது. இந்நிலையில், அம்மாநில அரசின் சார்பில் பள்ளிகள் திறப்பது குறித்து உண்டான அறிவிப்புகள் இன்று வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பின்படி, நடப்பாண்டின் இறுதி வரை பள்ளிகள் திடக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க ஆலோசனை செய்து வருவதாகவும், அதற்கான அறிவிப்பு பின் வெளியிடப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் இணைய வழி வகுப்புகள் நடத்துவதற்கு தடை எதுவும் இல்லை என்று மாநில அரசு தெளிவு படுத்தியுள்ளது.



No comments:

Powered by Blogger.