தமிழக தமிழறிஞர் - சிதம்பரநாதன் செட்டியார் மறைந்த நாள்..
தமிழக தமிழறிஞர் - சிதம்பரநாதன் செட்டியார் மறைந்த நாள்..
சிதம்பரம் அண்ணாமலை செட்டியார் 1907ஆம் ஆண்டு குடந்தையில் அமிர்தலிங்கம், பார்வதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். நேட்டிவ் உயர்நிலைப் பள்ளியில் பயின்று 1928 ஆம் ஆண்டு குடந்தைக் கல்லூரியில் முதல் மாணவராகத் தேறினார். டாக்டர் ஜி. யு. போப் அவர்களின் நினைவு பதக்கமும், அருந்தமிழ்த் தொண்டின் மூலம் செந்தமிழ்க் காவலர் என்ற சிறப்புப் பட்டமும் பெற்றவர்.
தமிழ் செய்திகள் வரலாறு தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற முதல் தமிழ் அறிஞர் ஆவார்.புதுக் கல்லூரியில் விரிவுரையாளராகவும் அரசினர் பாலக்காடு கல்லூரியில் விரிவுரையாளராகவும் விளங்கினார். தமிழ்த்துறைத் தலைவராகவும், துணைவேந்தராகவும் பணியாற்றிய முதல் தமிழ் பேராசிரியர். பட்டதாரி தொகுதியிலிருந்து பல்கலைக்கழக மேல வைக்கும், பட்டதாரி ஆசிரியர் தொகுதியிலிருந்து, அகடமி கவுன்சிலுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழாசிரியர் இவரே!. மலேசியா சிங்கப்பூர் இங்கிலாந்து ஆகிய பல நாடுகளுக்குச் சென்று தமிழ் இலக்கியப் புரட்சியை ஏற்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
இவருடைய படைப்புகள் தமிழோசை முதல் மன்னுயிர்க்கு அன்பர் என ஏராளமான நூல்களை இயற்றியுள்ளார். இவர் 1967 ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் நாள் மதுரையில் மறைந்தார்.
No comments: