Breaking

கம்பு வெஜிடபிள் சப்பாத்தி செய்முறை விளக்கம் பற்றி அறிவோம்


கம்பு வெஜிடபிள் சப்பாத்தி

டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் கம்பு மற்றும் வெஜிடபிளைச் சேர்த்து சப்பாத்தி செய்து சாப்பிடலாம். இப்போது இந்த கம்பு வெஜிடபிள் சப்பாத்தியை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள் :

கம்பு மாவு - 2 கப்

பச்சை மிளகாய் - 4

கறிவேப்பிலை - சிறிதளவு

முட்டைகோஸ் - 1 கப்

கேரட் - 3

உருளைக்கிழங்கு - 2

கரம் மசாலா தூள் - 1 ஸ்பு ன்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

பால் - அரை கப்

செய்முறை :

🌾 முதலில் முட்டைகோஸ், கேரட், உருளைக்கிழங்கை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

🌾 பிறகு ஒரு பாத்திரத்தில் கம்பு மாவை போட்டு அதில் தேவையான அளவு உப்பு, துருவிய முட்டைகோஸ், கேரட், உருளைக்கிழங்கு, கறிவேப்பிலை, கரம்மசாலா தூள், பால் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து 1 மணி நேரம் ஊறவிட வேண்டும்.

🌾 பின்னர் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திகளாக தேய்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.

🌾 கடைசியாக தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சு டானதும் தேய்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேகவிட்டு எடுத்தால், சுவையான கம்பு வெஜிடபிள் சப்பாத்தி தயார்!!!

No comments:

Powered by Blogger.