Breaking

செல்சியசு அளவுகோலை கண்டுபிடித்த சுவீடிய வானியலாளர், இயற்பியலாளர் மற்றும் கணிதவியலாளர்- ஆன்டர்ஸ் செல்ஷியஸ் பிறந்த நாள்.



நவம்பர்-27.


வெப்பநிலையை அளக்க செல்சியசு அளவுகோலை கண்டுபிடித்த சுவீடிய வானியலாளர், இயற்பியலாளர் மற்றும் கணிதவியலாளர்-
ஆன்டர்ஸ் செல்ஷியஸ் பிறந்த நாள்.

பிறப்பு:-

ஸ்வீடனில் உப்சாலா என்ற இடத்தில்
நவம்பர்-27, 1701 ஆம் ஆண்டு பிறந்தார். உப்சாலா பல்கலைக்கழகத்திலேயே இவரும் அறிவியல் படித்தார்.

பணிகள்:-

1730 முதல் 1744 வரை உப்சாலா பல்கலைக்கழகத்தில் வானியல் பேராசிரியராகப் பணியாற்றினார்.
அங்கு பல ஆய்வுகளிலும் ஈடுபட்டார்.

ஆராய்ச்சிகள்:-

பூமியிலிருந்து சூரியன் இருக்கும் தொலைவை அளப்பதற்கான புதிய முறை தொடர்பான ‘நோவா மெத்தடஸ் டிஸ்டான்டியம் சொலிஸ் ஏ டெர்ரா டிடர்மினன்டி’
(Nova Methodus distantiam solis a terra determinandi) என்ற ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். சூரிய உதயம் (auroral phenomena) குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டார். புவிமுனைச் சுடர்வு நிகழ்வு குறித்துப் பிற விஞ்ஞானிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.
வடமுனைச் சுடர்வுக்கும் (aurora borealis) புவி காந்தப் புல மாற்றங்களுக்கும் உள்ள தொடர்பை முதலில் கூறினார். வலிமையான இந்தச் சுடர்வுச் செயல்பாட்டின்போது, காந்த ஊசிகள் பெரிய அளவில் விலக்கமடைவதை இவர் கண்டார்.
1736-ல் ‘ஃபிரான்ஸ் அகாடமி ஆஃப் சயின்சஸ்’ ஏற்பாடு செய்த அட்சரேகையின் கோணத்தை அளவிட உருவாக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றார். 
புதிய வானியல் கண்காணிப்பு நிலையத்தை 1741-ல் உப்சாலாவில் வானியல் ஆய்வகத்தை நிறுவினார்.
சில குறிப்பிட்ட நட்சத்திரங்களின் பிரகாசத்தை அளக்க முதன் முதலாக வண்ணக் கண்ணாடித் தட்டுகளைப் பயன்படுத்தினார். மேலும் ஒளிமறைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வானியல் ஆய்வு தொடர்பான கருவிகளை உருவாக்கினார்.
ஏறத்தாழ 300 விண்மீன்களின் பொலிவுப் பருமைகளைத் தன் ஓளியளவு முறைப்படி அளந்து வெளியிட்டார்.

வெப்பநிலையை அளக்க 1742 இல் ஒரு அளவுகோலை உருவாக்கினார். இது முதலில் ‘ஸ்வீடிஷ் தெர்மாமீட்டர்’ எனக் குறிப்பிடப்பட்டது. பின்னர், அது இவரது பெயராலேயே  ‘செல்சியஸ் அளவுகோல்’ என்று குறிப்பிடப்படுகிறது. ஸ்வீடன் நாட்டுப் பொது நில வரைபடத்தை உருவாக்கப் பல புவிபரப்பு அளவீடுகளைக் கண்டறிந்தார்.

நூல்கள்:-

பூமியின் வடிவத்தைத் தீர்மானிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்ட இவர், 1738-ல் ‘டி அப்சர்வேஷனிபஸ் ப்ரோ டெல்லுரிஸ் டிடர்மினன்டா’ என்ற நூலை வெளியிட்டார்.

1941-ல் ‘அரித்மேடிக்ஸ் ஃபார் தி ஸ்வீடிஷ் யூத்’ என்ற நூலை வெளியிட்டார். 

பதவிகள்:-

ஸ்வீடன் அரசு அறிவியல் கல்விக் கழகத்தின் உறுப்பினராகவும் செயல்பட்டார்.

1739 இல் சுட்டாக்ஃஓல்மில் சுவீடிய அரசு அறிவியல் கல்விக்கழகத்தை நிறுவி பெயரிட்டார்.

இறப்பு:-

ஏப்ரல்-25 , 1744 ஆம் ஆண்டு
உப்சாலா, சுவீடனில் மரணமடைந்தார்.

குறிப்பு:-

ஐரோப்பாவில் செல்சியசு என்ற பெயரிலும், இங்கிலாந்தில் செண்ட்டிகிரேடு என்ற பெயரிலும் முன்பு வழங்கப்பட்டது.

No comments:

Powered by Blogger.